குஜராத்தில் திடீர் மதக் கலவரம்.. திருமண மண்டபம் தீவைப்பு.. ஞாயிறு நடந்த மோதல்!

குஜராத்தில் திடீர் மதக் கலவரம்.. திருமண மண்டபம் தீவைப்பு.. ஞாயிறு நடந்த மோதல்!

ஜராத்தின் அகமதாபாத் நகரில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட திடீர் கலவரத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலவரம் மூண்ட பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதி இளைஞர்களுக்கு இடையே நடந்த மோதலே வகுப்புக் கலவரமாக மாறி விட்டது. இரு தரப்பினரும் கல்வீச்சில் குதித்தனர். இதில் ஒரு போலீஸ் வாகன டிரைவர் காயமடைந்தார். மேலும் சிலரும் காயமடைந்தனர். மூன்று வாகனங்கள், 2 பெட்டிக் கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கலவரம் நடந்துள்ளது. அப்பகுதியில் நடந்த ஒரு திருமணம் தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் சிலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் அடிதடியாக மாறி வகுப்புக் கலவரமாக மாறி விட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் அங்குள்ள பான் கடைக்கு ஒரு இளைஞர் போய் புகை பிடித்துள்ளார். இதற்கு இன்னொரு தரப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஆட்சேபித்துள்ளனர். இதுதொடர்பாக மோதல் வெடித்துள்ளது. இதுதான் பிரச்சினை பெரிதாக காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.

கலவரம் மூண்ட அரை மணி நேரத்திற்குள்ளேயே நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாம். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். யாரும் படுகாயமடையவில்லை என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜேஷ் மக்வானா என்பவர் கூறுகையில், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மோதல் நடந்தது. அதன் பிறகுதான் போலீஸார் வந்தனர். கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரத்தை அடக்கினர்.

கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் கடந்த 12 வருடமாக இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக கலவரம் நடந்துள்ளது.

இங்குள்ள ஒரு திருமணத்திற்கு வந்திருந்த சிலரால்தான் பிரச்சினையாகி விட்டது. கலவரத்தின்போது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மண்டபத்தை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. மண்டபமும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது என்றார்.

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், இரு தரப்பினருமே கல்வீச்சில் ஈடுபட்டனர். இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர். இரு தரப்பையும் சேர்ந்த பெரியவர்கள் தற்போது தலையிட்டுள்ளனர். மத்தியஸ்தம் நடந்து வருகிறது. இரு தரப்பையும் சேர்ந்த இளைஞர்களின் தேவையில்லாத சீண்டல்கள், கேலி கிண்டலால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டு விட்டது என்றார்.

Posted by tamilnadu on 5:49 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "குஜராத்தில் திடீர் மதக் கலவரம்.. திருமண மண்டபம் தீவைப்பு.. ஞாயிறு நடந்த மோதல்!"

Leave a reply