பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் பதிவு செய்தார் போலிஸ் பக்ருதீன்.




வேலூர், மே 27–

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையை சேர்ந்த நகைக்கடை ஊழியர் பஞ்சாட்சரம். இவர், கடந்த ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது சிலர் மடக்கி கொலை செய்து விட்டு அவரிடமிருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்து முன்னணி, பா.ஜ.க. பிரமுகர்கள் கொலை வழக்கில் விசாரணை கைதியான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் பஞ்சாட்சரத்தை கொன்று பணம் பறித்தது தெரிய வந்தது  என்று ஆதாரம் இல்லாமல் கைதகினார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக அப்பாவி  3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2–வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 23–ந் தேதி வேலூர் கோர்ட்டில் 3 அப்பாவிகள்  ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு ரேவதி ஆதாரம் இல்லாத காரணத்தினால் அப்பாவிகளை  3 பேரையும் வருகிற 27–ந் தேதி வரை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து போலீஸ் பக்ருதீனை கோவைக்கு அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை வேலூருக்கு அழைத்து வந்தனர்.

இதேபோல் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை வேலூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போலீசாருக்கு எந்த வித ஆதாரம் கிடைக்காத காரணத்தினால் அப்பாவிகள் 3 பேரையும் வருகிற 6–ந் தேதி வரை வேலூர் ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்..


பின்னர் அப்பாவிகளை  3 பேரும்  வேலூர் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.

கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த போலீஸ் பக்ருதீன், ‘இந்தியா வருகை தரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்' என்று கூறினார்.


Posted by tamilnadu on 1:35 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் பதிவு செய்தார் போலிஸ் பக்ருதீன்."

Leave a reply