விசா விவகாரம் - மிரட்டிய சைனா! பதுங்கிய மோடி!

விசா விவகாரம் - மிரட்டிய சைனா! பதுங்கிய மோடி!

 தங்கள் நாட்டு முத்திரையை நமது பாஸ்போர்டில் பதித்து உள்ளே வரலாம் என்று அனுமதித்தால் அது சாதாரண விசா. தனியாக ஒரு பேப்பரில் தங்கள் நாட்டு முத்திரையை பதித்து அந்த தாளை நமது பாஸ்போர்டுடன் இணைத்தால் அது Stapled visa.

அதாவது Stapled Visa பெற்றவர் அந்த நாட்டை விட்டு வெளியேறியவுடன் அந்த விசாவை கிழித்து எறிந்துவிடலாம். எனவே நாம் சம்பந்தப்பட்ட நாட்டுக்குள் சென்று வந்த எந்த அடையாளமும் நமது பாஸ்போர்ட்டில் இருக்காது.Stapled Visa எதற்கு? 
எதற்கு என்றால் எல்லைக்கு அந்தப்பக்கம் இருக்கும் அடுத்தநாட்டு அரசை வெறுப்பேற்ற. அடுத்தநாட்டின் சிலபகுதிகளை பிடித்துவைத்துக்கொண்டு இது உன்னோடதல்ல என்னோடது என்று  கடுப்பேற்ற. அதாவது இது எங்க ஏரியா உள்ள வராத என்று மிரட்டுவது. எங்கோ ஊர்ப்பக்கம் உள்ள நமது நிலத்தில் லோக்கல் குண்டர்கள் அமர்ந்து கொண்டு இந்த இடம் எங்களோடது என்பார்களே அது போலத்தான் இதுவும்.எல்லைப்பிரச்சனை உள்ள நாடுகளில் விசா வழி வெறுப்பேற்றும் கலாச்சாரம் உள்ளது. உதாரணமாக சைனா. தனது எல்லையைத் தொடும் அருணாச்சலப்பிரதேசத்தை என்னுடையது என்கிறது. சைனா ஒரு முரட்டு பக்கத்துவீடு. அதனிடம் ஏற்கனவே இந்தியா உதை வாங்கியிருக்கிறது. அதனால் சண்டைக்குப் போக முடியாமல் அவ்வப்போது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் தொடர்ந்து சைனா இந்தியாவை வெறுப்பேற்றிக்கொண்டே இருக்கிறது. அதாவது இந்தியராக இருந்தாலும்  அருணாசலப்பிரதேசத்துக்குள் நுழைந்தால் எங்கள் நாட்டுக்கு வருக என்று சீனா வரவேற்கிறது. வருகைக்கு அத்தாட்சியாக stapled visa வழங்குகிறது. அதாகப்பட்டது இந்தியாவிற்குள்ளேயே இந்தியர்கள் விசா பெற்று நுழைய வேண்டியதிருக்கிறது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த விஷயத்தில் சைனாவுக்கு பயந்து பதுங்கிவிட்டார், மோடி வந்தால் சைனாவை நொறுக்கிவிடுவார் என்றார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால் நடந்தது வேறு. இந்தியாவிற்கு வந்து இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவிற்கு எதிராக பேசிவிட்டுச் சென்றார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்.கடந்த வாரம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்(Wang) நமது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். சந்திப்பின்போது மிகவும் உறுதியாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு வரும் இந்தியர்கள் அனைவருக்கும் Stapled Visa கொடுப்போம். இது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான விஷயம் என்று பகிரங்கமாக சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது அருணாச்சலப்பிதேசம் எங்களுடையது. எனவே இந்தியர்கள் உள்ளே வந்தால் எங்களிடம் விசா வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்று சிரித்துக்கொண்டே மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தியா அரண்டு போய் கப்சுப் என்று இருந்துவிட்டது. அதனை எதிர்த்து இது வரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மீடியாக்களும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இந்தியாவின் இமேஜைவிட மோடியின் இமேஜைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்.

Posted by tamilnadu on 11:39 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "விசா விவகாரம் - மிரட்டிய சைனா! பதுங்கிய மோடி!"

Leave a reply