ஞாயிறு, 15 ஜூன், 2014

கூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள்?


கூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள்?

[1] 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி நடந்துவிட்டது, அது அங்கேப் போயிற்று, இங்கேப் போயிற்று என்கிறீர்கள். ஏன் ஒரு மாநில முதல்வர் கூட எங்கள் மாநிலத்துக்கு இவ்வளவு கூடங்குளம் மின்சாரம் வருகிறது என்று இதுவரை சொல்லவில்லை?

[2] சூப்பர் டூப்பர் அணுமின் நிலையத்தை இதுவரை தேசத்துக்கு அர்ப்பணிக்கவில்லை ஏன்?

[3] பிரதமர் மோடி கூடங்குளம் வந்து அணுமின் நிலையத்தை திறந்து வைத்து, இங்கே எந்தக் குளறுபடிகளும் நடக்கவில்லை, கோளாறுகளும் இல்லை, பரிபூரண பாதுகாப்புடன் இருக்கிறது என்று உத்தரவாதமளித்துச் செல்வாரா?

[4] இதுவரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தயாரித்த மின்சாரத்தால் எவ்வளவு வருமானம் வந்திருக்கிறது?

[5] கடந்த 17 மாதங்களில் சுமார் 5.25 கோடி ரூபாயை உங்கள் ஊழியர்களின் மருத்துவப் பிரச்சினைகளுக்கு செலவு செய்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் கண் மருத்துவத்துக்கென நாகர்கோவிலிலுள்ள ஒரு கண் மருத்துவமனையில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. உங்கள் ஊழியர்களின் கண் பிரச்சினைக்கு காரணம் என்ன? அருகாமையிலுள்ள பொதுமக்களின் கண்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?

சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்
யூன் 15, 2014

விசா விவகாரம் - மிரட்டிய சைனா! பதுங்கிய மோடி!

 தங்கள் நாட்டு முத்திரையை நமது பாஸ்போர்டில் பதித்து உள்ளே வரலாம் என்று அனுமதித்தால் அது சாதாரண விசா. தனியாக ஒரு பேப்பரில் தங்கள் நாட்டு முத்திரையை பதித்து அந்த தாளை நமது பாஸ்போர்டுடன் இணைத்தால் அது Stapled visa.

அதாவது Stapled Visa பெற்றவர் அந்த நாட்டை விட்டு வெளியேறியவுடன் அந்த விசாவை கிழித்து எறிந்துவிடலாம். எனவே நாம் சம்பந்தப்பட்ட நாட்டுக்குள் சென்று வந்த எந்த அடையாளமும் நமது பாஸ்போர்ட்டில் இருக்காது.Stapled Visa எதற்கு? 
எதற்கு என்றால் எல்லைக்கு அந்தப்பக்கம் இருக்கும் அடுத்தநாட்டு அரசை வெறுப்பேற்ற. அடுத்தநாட்டின் சிலபகுதிகளை பிடித்துவைத்துக்கொண்டு இது உன்னோடதல்ல என்னோடது என்று  கடுப்பேற்ற. அதாவது இது எங்க ஏரியா உள்ள வராத என்று மிரட்டுவது. எங்கோ ஊர்ப்பக்கம் உள்ள நமது நிலத்தில் லோக்கல் குண்டர்கள் அமர்ந்து கொண்டு இந்த இடம் எங்களோடது என்பார்களே அது போலத்தான் இதுவும்.எல்லைப்பிரச்சனை உள்ள நாடுகளில் விசா வழி வெறுப்பேற்றும் கலாச்சாரம் உள்ளது. உதாரணமாக சைனா. தனது எல்லையைத் தொடும் அருணாச்சலப்பிரதேசத்தை என்னுடையது என்கிறது. சைனா ஒரு முரட்டு பக்கத்துவீடு. அதனிடம் ஏற்கனவே இந்தியா உதை வாங்கியிருக்கிறது. அதனால் சண்டைக்குப் போக முடியாமல் அவ்வப்போது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் தொடர்ந்து சைனா இந்தியாவை வெறுப்பேற்றிக்கொண்டே இருக்கிறது. அதாவது இந்தியராக இருந்தாலும்  அருணாசலப்பிரதேசத்துக்குள் நுழைந்தால் எங்கள் நாட்டுக்கு வருக என்று சீனா வரவேற்கிறது. வருகைக்கு அத்தாட்சியாக stapled visa வழங்குகிறது. அதாகப்பட்டது இந்தியாவிற்குள்ளேயே இந்தியர்கள் விசா பெற்று நுழைய வேண்டியதிருக்கிறது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த விஷயத்தில் சைனாவுக்கு பயந்து பதுங்கிவிட்டார், மோடி வந்தால் சைனாவை நொறுக்கிவிடுவார் என்றார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால் நடந்தது வேறு. இந்தியாவிற்கு வந்து இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவிற்கு எதிராக பேசிவிட்டுச் சென்றார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்.கடந்த வாரம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்(Wang) நமது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். சந்திப்பின்போது மிகவும் உறுதியாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு வரும் இந்தியர்கள் அனைவருக்கும் Stapled Visa கொடுப்போம். இது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான விஷயம் என்று பகிரங்கமாக சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது அருணாச்சலப்பிதேசம் எங்களுடையது. எனவே இந்தியர்கள் உள்ளே வந்தால் எங்களிடம் விசா வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்று சிரித்துக்கொண்டே மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தியா அரண்டு போய் கப்சுப் என்று இருந்துவிட்டது. அதனை எதிர்த்து இது வரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மீடியாக்களும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இந்தியாவின் இமேஜைவிட மோடியின் இமேஜைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்.


உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் பாஜக மூத்த தலைவர் ஓம்வீர் (40) அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜாலி கூறுகையில்,

"பாஜக துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஓம்வீர் வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளார்.

அவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். ஓம்வீரின் துப்பாக்கியையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்'' என்று கூறினார்..

இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில், தாத்ரி நகராட்சித் தலைவராக உள்ள கீதா பண்டிட்டின் கணவரும், பாஜக நிர்வாகியுமான விஜய் பண்டிட் கடந்த சனிக்கிழமை மாலை நடு வீதியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.

தினமணி செய்தி

பெரும்பாலான கொலைகள் கட்ட பஞ்சாயத்து,பெண் விவகாரம் ,கந்துவட்டியால் நடைபெறுகின்றன .

மோடி ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்துவரும் என எச்சரிக்கிறார் நடிகை நந்திதா தாஸ்...!!

நரேந்திரமோடி ஆட்சியின் கீழ் கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அஞ்சுவதாக பிரபல நடிகையும் இயக்குநரும் எழுத்தாளருமான நந்திதா தாஸ் கூறினார். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் தான் இதை கூறுவதாகவும் நந்திதா தாஸ்“அவுட் லுக்’’ பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். “நான் உடனே எதிர்பார்ப்பதும் மிகவும் பயப்படுவதும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் தான். மக்களின் மனதைமாற்றவும் அரசுகளை மாற்றவும் முடிகின்ற வகையில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கவும் ஜனநாயக ரீதியிலும் கண்ணியத்துடனும் குரல் எழுப்பவும் வாய்ப்புஇருப்பதால் தான் ஜனநாயகம் நிலைபெற்றுள்ளது.

அருவெறுக்க தக்க தணிக்கைமூலமும் விஷமத் தனமான நடவடிக்கைகளின் மூலமும் விமர்சகர்களின் வாயை அடைக்கவே பாஜகவும் அவர்களை ஆதரிக்கின்றவர்களும் எப்போது முயன்று வந்துள்ளனர்’’. என்றும் நந்திதா தாஸ் சுட்டிக் காட்டுகிறார்.ஃபயர் திரைப்பட வெளியீட்டு விழாவின் போதும் வாட்டர் திரைப்பட படப்பிடிப்பின் போதும் இத்தகைய பிரச்சனைகளை நானே சந்திக்க வேண்டியதாயிற்று என்று அவர் தனது கட்டுரையில் நினைவு கூர்கிறார்.மதச்சார்பற்ற கட்சிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தான் தெரிவித்த கருத்துகூட மோடி ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. “குழந்தையை தூக்கிக் கொண்டு பாகிஸ்தானுக்கு செல்’’ என்று அவர்கள் டுவிட்டர் மூலம் தன்னை மிரட்டினார்கள் என்றும் நத்திதா தாஸ் கூறுகிறார்.குஜராத் கலவரத்தை அடிப்படையாக வைத்து தான் தயாரித்த ஃபிராக் என்ற திரைப்பட விஷயத்திலும் இத்தகைய மிரட்டல்கள் வந்தன.

“ ஒரு கலைஞர் என்ற முறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்கப்படலாம் அச்சுறுத்தப்படலாம், என்ற நிலைமை தான் இப்போது எனக்கு உள்ளது என்றுதோன்றுகிறது. ஊடகங்கள் தங்களுக்கு தாங்களே தணிக்கையை ஆரம்பித்து விட்டதாகவும் தோன்றுகிறது. பிரச்சனை எதுவும் வந்துவிட க் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

இது என்ன நேரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும். கூடாது என்று சொல்கின்றவர்கள் குறைந்து வருகிறார்கள்’’. என்றும் நந்திதா தாஸ் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.குஜராத் மாடல் வளர்ச்சி குறித்த பிரச்சாரத்தின் போலித்தனத்தையும் நந்திதா தாஸ் சுட்டிக் காட்டுகிறார். சாதாரண பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலின் படி கூட மகாராஷ்டிராவும், பீகாரும், தமிழ்நாடும், குஜராத்தை மிஞ்சி நிற்கின்றன. வெற்றியின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல “வளர்ச்சி’’ முழக்கத்தின் பின்னணியில் பிளவுவாத அரசியல் மறைந்திருப்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது பாஜக வின் தேர்தல் பிரச்சாரம்.அமித்ஷா, பிரவீன் தொகாடியா போன்றவர்களின் பேச்சுக்களும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மற்ற எல்லா தலைப்பாகைகளையும் அணிந்து கொண்ட மோடி, முஸ்லிம் தொப்பியை அணிய மறுத்ததும் இதைத் தெளிவாக்குகிறது என்றும் நந்திதா தாஸ் கூறுகிறார். Courtesy Theekkathir Tamil Daily.


கடந்த வாரம் புனேயில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞர் முஃஸின் ஷேக் 30 க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பலால் அடித்தே படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் இன்னும் 2 முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது. வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீக்கீரையாக்கப்பட்டது. காலையில் தொடங்கிய இந்த வன்முறை மறுநாள் நள்ளிரவு வரை தொடர்ந்தது.
தற்போது அந்த கலவரத்தை ஆராய்ந்த குழு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது, அதில் சம்பவம் நடந்த மே 31 மற்றும் ஜூன் 1 ம் தேதிகளில் குறிப்பிட்ட சில பேக்கரி மற்றும் முடி திருத்தும் கடைகள் சரியாக கலவரம் நடக்கும் நேரத்தில் மூடி இருந்தது, அவர்களுக்கு எப்படி தெரியும் அது மட்டுமல்லாது மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் அந்த கடைகளின் பெயர்கள் உள்ளன, அதன் உரிமையாளர்கள் முஸ்லிம்கள் இல்லை.
ஆனால் தாக்குதலுக்கு உள்ளான அனைத்து கடைகளும் உருது மொழியில் எழுதப்பட்ட முஸ்லிம்கள் கடைகளாகும், ஆகவே, முன் கூட்டியே இந்துக்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து தாக்கியதாக, திட்டமிட்ட செயலாகவே உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது
Sources:-  

http://timesofindia.indiatimes.com/india/Violence-that-killed-Pune-techie-planned/articleshow/36268460.cms 

http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31805&articlexml=Violence-against-Pune-Muslims-appears-planned-09062014007028
புனே: முஸ்லிம் வாலிபர் படுகொலை...சிவசைனிக் பயங்கரவாதிகள் வெறியாட்டம்...


கடந்த வாரம் சனிக்கிழமை அன்று மராட்டிய சிவாஜி மற்றும் சிவசேனா நிறுவனர் பால்தாக்ரே ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாக கணினியில் மார்ஃபிங்க் செய்யப்பட்ட புகைப்படத்தை ஏதோ ஒரு விஷமி முகநூலில் பரப்பி இருக்கிறான்…இதனை தொடர்ந்து சனிக்கிழமை இரவு முதல் புனே மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சிவ சைனிக் அமைப்பை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…
இக்கலவரத்தில் இப்புகைப்படத்தை பரப்பியதாக கூறி IT துறையில் வேலை செய்து வரும் 24 வயதான மொஹ்ஸீன் சாதிக் ஷெக் என்ற நபரை சிவ சைனிக் காவி பயங்கரவாதிகள் அடித்தே கொலை செய்துள்ளனர். தொழுகை முடிந்து நண்பர் ரியாஜ் உடன் வீடு திரும்ம்பி கொண்டிருந்த அவரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இது குறித்து ரியாஜ் கூறுகையில் சாதிக் தாடியுடனும் தலையில் தொப்பியுடனும் இருந்ததை கண்ட பயங்கரவாதிகள் அவரை தாக்கினர் என்றார். தாக்குதலுகுள்ளான ரியாஜ் படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
காவல் துறையின் விசாரணையில் இப்புகைப்படம் வெளியிட்ட முகநூல் பக்கம் சில வருடங்களுக்கு முன்னறே ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. அந்த பக்கம் இந்த புகைப்படத்தால் தற்போது முடக்கப்பட்டது. இப்புகைப்படத்தை வெளியிட்டது முஸ்லிம் நபர் அல்ல. அவர் ஒரு ஹிந்து என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முகநூல் ஒரு அமெரிக்க நிறுவனம், எனவே அந்நிறுவனம் ஒரு தனி நபரின் விபரங்களை தர மறுத்ததன் அடிப்படையில் கணினியின் IP முகவரியை வைத்து அந்த நபர் பயண்படுத்திய கணினி மற்றும் செல்பேசி ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.
இக்கலவரத்தினால் புனேயில் உள்ள மஸ்ஜிதுல் தன்சீமுல் முஸ்லிமீன், தாருல் உலூம் அஷ்ரபிய்யா, லாண்டேவாடி, பூசரியா போன்ற பள்ளிவாசலுக்குள் நுழைந்த 500 க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள், பள்ளியின் திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியுள்ளனர். பீர்ஷா ஜலாலுத்தீன் காதிரி 'தர்கா'வும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நூர் முஹல்லா பள்ளிவாசலுக்குள் வீச்சறுவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடனும், பெட்ரோல் குண்டுகளுடனும் நுழைந்த கும்பல், கப்ருஸ்தானை சேதப்படுத்தியும், தண்ணீர் டாங்கிகளை உடைத்தும், முஸ்லிம்களை பீதிவயப்படுத்தியுள்ளனர்.

பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 25 வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது.

குர்வே ரோடு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 20 பேக்கரிகள் சேதப்படுத்தப்பட்டுள்ள அழிவின் மதிப்பீடு மட்டும் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர்.
அது மட்டும் இன்றி புனேயில் 193 பேருந்துகளும் கொஹல்பூரில் 200 பேருந்துகளும் தீயிட்டு குளுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹிந்து ராஷ்ட்ர சேனாவை சார்ந்த 7 பேர் மற்றும் அதன் தலைவரான தஞ்சாய் தேசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி கொடூரமான முறையில் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு முஸ்லிம் இளைஞரை கொலை செய்து 400க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் மற்றூம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொது சொத்துக்கு சேதாரம் விளைவித்த பயங்கரவாதிகள் இந்த நாட்டை காப்பற்ற போகிறார்களாம்…தேச பக்தர்களாம்…..


இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்த நரேந்திரமோடி..!

நரேந்திரமோடி எப்படி இந்தியர்களின் நேரத்தை வீண்ணடித்தார் என கேட்கிறீர்களா?

தேர்தலுக்கு முன்பு வரை ஒரு பெரிய லிஸ்ட்யை தாயார் செய்து அதை சமூக வலை தளங்களிலும், தனது தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டார்.

அதாவது, இந்தியா பொருளாதரத்தில் முன்னேற வேண்டுமானால் நாம் அந்நிய நாட்டு பொருட்களை பயன்படுத்தாமல் இந்திய தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என கூறிவந்தார்.

அதற்காக ஒரு பெரிய லிஸ்ட்-யை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரவ செய்தார்.

ஆனால் தற்பொழுது நரேந்திர மோடி அவர் சொன்ன சொல்லை அவராலேயே பின்பற்ற முடியவில்லை. அதற்காக நேரத்தை ஒதுக்கி படித்த மக்கள் அனைவரின் நேரத்தை வீண்ணடித்து முட்டாள் ஆக்கியுள்ளார்.

தான் பிரதமர் ஆனா பின்பு ஏற்கனவே பயன்படுத்தி வந்த இந்திய தயாரிப்பான ஸ்கார்பியோ காரை விட்டு விட்டு அந்நிய தயாரிப்பான BMW காரை பயன்படுத்த துவங்கியுள்ளார்.

அதே தொழில்நுட்பத்தில் நாங்கள் காரை உருவாக்கி தருகிறோம் என மகேந்திரா நிறுவனம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மோடி அதனை ஏற்க மறுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?

அவர் தயாரித்து அனுப்பிய லிஸ்ட்-யை நீங்களே படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும். பதவி வந்த உடன் சொன்னைதை மறந்து விடுவார்கள் என்பது நரேந்திர மோடியின் விசயத்திலும் பொருந்தியுள்ளது.

I am Naredra Modi
 PLEASE SHARE it with everyone and with all your groups ..
- अगर सभी भारतीय 90 दिन तक कोई भी विदेशी सामान नहीं ख़रीदे..

तो भारत दुनिया का दूसरा सबसे अमीर देश बन सकता है..

सिर्फ 90 दिन में ही भारत के
2 रुपये 1 डॉलर के बराबर हो जायेंगे..

हम सबको मिल कर
ये कोशिश आजमानी चाहिए
क्युकी ये देश हमारा है...!!!!

plz share & aap bhi sahyog kare
Plz frwd this msg to all groups and say 
Is desh me rahena he to jag jao
In 1970 1$ = Rs. 4
Today 1$ = Rs. 68
Estimated 1$ by end of the year = Rs. 72

Dollar is not getting stronger, rupee is getting weaker!
&
nobody else is responsible for d fall, except us!

How can we change it!

1. A Cold Drink produced for 70-80 paisa sold at Rs. 9-10!
Stop drinking them,
Drink Lemon juice, Lassi, Fruit juice, butter milk etc. instead of coke, pepsi.
========================

2. Use Soaps such as Cinthol, Santoor,Medimix, Neem, Godrej brands
instead of :-
Lux,lifebuoy, rexona, liril, dove, pears, hamam,camay, palmolive!
========================

3. Toothpaste-
Use Neem, babool, vicco, dabur
Instead of :-
Colgate,close up,pepsodent, cibaca
========================
4. Toothbrush :-
Use prudent, ajanta,promise, instead of :-
colgate, close up, oral-b, pepsodent,forhans.
========================
5. Shaving cream:-
Use godrej, emami,
Instead of :-
Palmolive,old spice, gillete.
========================
6. Blade-
Use supermax, topaz, laser, ashoka
Instead of :-
Seven-o-clock, 365, gillete
========================
7. Talcum powder:-
Use santoor, gokul,cinthol, boroplus
Instead of :-
ponds, old spice, johnson,shower
to shower.
========================
8. Milk powder:-
Use indiana, amul,amulya
Instead of :-
anikspray,milkana, everyday milk, milkmaid.
=======================
9. Shampoo :-
Use Nirma, Velvette
Instead of :-
halo, all clear, sunsilk, head and shoulders, pantene.
========================
10. Mobile connections-
Use bsnl, airtel,reliance,idea,docomo
Insteaf of :-
Vodafone
========================
11. Food :-
Eat at jay bhavani, TGB, local restaurants
Instead of :-
mac-d, subway, pizza hut, kfc.
========================
12. Mobiles :-
Use micromax, karbonn, lava,croma
Instead of :-
samsung,apple, htc, sony.

13. Bikes :-
Use hero, bajaj
Instead of :-
Honda, yamaha.
========================
14. Footwear:-
Use paragon, chavda,lakhani
Instead of :-
Nike, reebok, adidas,converse.
========================

15. Jeans and shirts:-
Use spykar, k-lounge
Instead of :-
Lee, levi's,U.s. Polo, pepe, benetton.
========================

16. Watch :-
Use titan, sonata ,fasttrack
Instead of :-
tommy, Citizen, zodiac, tissot.
========================
Dont use products from hindustan lever,
Only name is hindustan it has been taken by foreign company

We blame politicians

Now go and check the things you use and ask yourself how much do you contribute to the decreased value of RUPEE

You use these foreign made products...
&
Government have to pay in dollars for d same...thus value of rupee Decreases...
Aren't u responsible for fall of rupee..
Samsung S4 at Rs 41k.. Same features Micromax Can4 comes at Rs 17k..means u waste Rs 24k..and these 24k go to south Korea in dollars..

None of the indian products are subordinate in quality, they might look a bit less fancy!!

Why is china so ahead, because the whole world uses made in china items.

We indians could atleast use made in india items!

Change comes from within! spread the change by broadcasting this msg to everyone on your contact list!

lets see by the end of this year does 1$ become Rs. 70 or it becomes Rs. 50..

JAAAAGO.
Some of these we follow....but we can make our possible to make a change.

Before deleting, HELP your frnds by passing it..!

Let it reach d 121 crores Indians.

It might help sum1. Fwd to as many as u can.

WhatsApp to free hai,, soo..frwrd it plz..

All the best.
Sent from My Blackberry® @ Tata Docomo

நன்றி
Newstig.com
Fishing

இலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதா? என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது?
உண்மையில், பாஜகவின் அணுகுமுறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து வேறுபட்டது அல்ல. பாஜகவின் கடந்த ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்ட போது, “வழி தெரியாமல் சென்றுவிடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று இலங்கை கடற்படையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றுதான் அவர்கள் கூறி வந்தனர்.
ஒரு எடுத்துக்காட்டுக்கு, அன்று ஆட்சியிலிருந்த கருணாநிதி நவம்பர் 28,2000 தேதியிட்ட கடிதம் ஒன்றை பார்க்கலாம். தே.ஜ.கூட்டணி சார்பாக அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு மீனவர் படுகொலையை தடுத்த நிறுத்த வேண்டுமென்று அவர் கடிதம் எழுதினார். அதற்கு டிசம்பர் 22, 2000 தேதியிட்டு எழுதிய பதில் கடிதத்தில் வாஜ்பாயும் இனி மீனவர் படுகொலை நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார். ஆனால், நடந்தது என்ன?
வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரம் கடக்கவில்லை, 2 மீனவர்கள் ஜனவரி 29, 2001 அன்று 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். (இணைப்பு)
அதோடு மட்டுமல்ல, பாஜக ஆட்சிகாலத்திலும் மீனவர்கள் கொல்லப்பட்டனர். பாஜகவும் கண்டிப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தது. 2014 தேர்தலின்போது, கீழ்க்காணும் பட்டியலை மறைத்தபடியே பிரச்சாரம் செய்தனர், பாஜக அணியினர்.
8.12.1999 அன்று RMS 1512 என்ற படகில் சென்ற வழிவிட்டான்,
19.02.1999 அன்று RMS 600 என்ற படகில் சென்ற செல்வபாண்டியன்,
10.05.2000 அன்று RMS1126 என்ற படகில் சென்ற முனீஸ்வரன்,
19.06.2001 அன்று TU 328 என்ற படகில் சென்ற பாபு,
16.02.2001 அன்று RMS 583 என்ற படகில் சென்ற் முருகன்,
03.08.2001 அன்று RMS 1654 என்ற படகில் சென்ற சரவணன், கோட்டை, முனீஸ்வரன்,
18.10.2003 அன்று RMS 229/MB என்ற படகில் சென்ற பிரபு,
09.09.2004 அன்று RMS 401 என்ற படகில் சென்ற நாகநாதன் உள்ளிட்ட பல மீனவர்கள் இலங்கை கடற்படையால சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாம் பட்டியலைக் காட்டில் வாதிட்டால், “ஏதோ சில கொலைகள் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நடந்ததுதான். ஆனால், தற்போது, வந்திருக்கின்ற பிரதமர் மிகவும் ‘ஆண்மையான’ பிரதமர். ஆகவே, இலங்கை பயப்படும், சீனா அஞ்சும் என்று சவடால் அடிக்கின்றனர்.
உண்மை வெகுதூரத்தில் இல்லை. தற்போது பிராதமராக உள்ள, குஜராத் மாநில முன்னாள் முதல்வர் மோடியால் தன் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் படுகொலையை தடுக்க முடிந்ததில்லை.
ஜனவரி 27,2014 அன்று வந்த செய்தி குறிப்பின்படி,
“நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும், இந்த குறிப்பிட்ட மீன்பிடி காலத்தில் மட்டும் 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும், 32 படகுகள் முடக்கப்பட்டதும் நடந்திருக்கின்றது. இதற்கு எந்த அரசும் நிரந்த தீர்வு தரும் நடவடிக்கையை எடுக்கவில்லை” என்று மோடியிடம் கோரிக்கை வைக்கச் சென்ற குழுவில் இடம்பெற்ற பரத் மோடி என்னும் மீனவர் சங்க பிரதிநிதி கூறியிருக்கின்றார்.
மேலும், ‘ இலங்கையோடு பேச்சுவார்த்தை நடத்த முடியுமென்றால், பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன சிக்கல். நரேந்திர மோடி அவர்கள் இந்த பிரச்சனையை நடுவண் அரசுக்கு எடுத்துக் கூறி, உரிய தீர்வை எட்ட முயற்சிக்க வேண்டும். சிறிய கால இடைவெளிக்கு பிறகு, பாகிஸ்தான் அரசு மீனவர்களை விடுவித்தாலும், படகுகளை திரும்பத் தருவதில்லை. தோராயமாக அது திரும்ப தர வேண்டிய படகுகளின் எண்ணிக்கை மட்டும் 815’என்று அவர் கோரியிருக்கின்றார். (இணைப்பு – First post)
பிப்ரவரி 27,2014 ஆம் தேதி 30 குஜராத்தி மீனவர்களை பாகிஸ்தான் கப்பற்படை கைது செய்திருக்கின்றது. பாகிஸ்தானை பொறுத்தவரையில் 240 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. (இணைப்பு – Times of India)
அதில் நவாஸ் ஷெரீபின் வருகையை ஒட்டி 150 மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.
14 அக்டோபர், 2013 அன்று பாகிஸ்தான் Marine ஒரு மீனவனை சுட்டுக் கொன்றிருக்கின்றது. இதுவரைக்கும் பாகிஸ்தானிய சிறைகளில் 14 மீனவர்கள் மரணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. (இணைப்பு – Times of India)
மோடியினுடைய ஆட்சி இருக்கும் பொழுதே, அவரது மாநிலத்தின் மீனவர்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டுக் கொள்வதும், கைது செய்வதும் தொடர்கதையாகத்தான் இருந்தது, இப்போதும் தொடர்கிறது.
ஆனால் தனது பதவியேற்பு விழாவுக்கு நவாஷ் ஷெரிப்பை அழைத்த மோடி இதுகுறித்து பேசியதாக செய்திகள் இல்லை. மாறாக, இந்திய வர்த்தக நிறுவனங்களில் நலன்களை மையப்படுத்தியும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவுமே பேசியிருக்கிறார்.
அண்டை நாட்டுக்கு எதிராக போர் தொடுப்பதோ, வலிமையைக் காட்டுவதோ மீனவர்களை பாதுகாக்காது. ஆனால், ஒரு அரசு தனது மீனவர் பாதுகாபையும், நலனையும் முதன்மை கவனமாகக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் அரசானாலும், பாஜக அரசானாலும் பெரும் நிறுவனங்களின் வர்த்தக நலனே முதன்மை இடத்தை பிடித்திருக்கிறது. அதனால்தான், புதிதாக ஆட்சியமைத்திருக்கும் பாஜக அரசு மீனவர் கோரிக்கைகளை மையமாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், மீனவர்களுக்கு தனியாக ஒரு அமைச்சகம் அமைத்து மீனவர் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் பின்னுக்குத் தள்லப்பட்டது.
ஆட்சி மாறினாலும், மாநிலங்கள் மாறினாலும் மீனவர்களின் நிலை நாடுமுழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கின்றது. ஆட்சியாளர்களும், மீனவர்களின் அவல நிலையை மாற்றும் அக்கறை இல்லை.
நம்மிடம் இருக்கும் ஒரே வழி, மக்கள் நலன்களை மையப்படுத்திய உறவை அண்டை நாடுகளோடு பராமறிக்கும் அரசுகள்தான். அப்படிப்பட்ட அரசை ஏற்படுத்த, எந்த அவதாரமும் மண்ணில் பிறப்பெடுக்காது. நமக்கான அரசை நோக்கிய பயணத்தை நாமே நடத்தி முடிக்க வேண்டும். நாளை நமதே, நாளை உழைக்கும் மக்களாகிய நம்முடையதே!
மகிழ்நன்


இம்பால்: மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கோவையைச் சேர்ந்த ஜி. மோகனகுமார் (வயது 41) என்ற ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். 

மணிப்பூரின் சூரந்த்பூர் மாவட்டத்தில் சிங்காட் என்ற பகுதியில் கிராமம் ஒன்றில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைவீரர்கள் நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது காவி தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜி. மோகனகுமார் (வயது 41) என்ற ராணுவ ஹவில்தார் படுகாயமடைந்தார். 

படுகாயமடைந்த நிலையில் அவர் ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மெட்ராஜ் ரெஜிமெண்ட் படை வீரர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இப்பகுதியில் கூர்கா ரைபிள்ஸ் படையினர்தான் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அண்மையில் மெட்ராஜ் ரெஜிமெண்ட் படையினர் இங்கு ரோந்து பணிக்கு மாற்றப்பட்டனர்.


காஸ்மீரிகளின் முழக்கம். “எங்கள் தேசம் காஸ்மீர் தேசம். இந்திய நாய்களே திரும்பி செல்லுங்கள்”

 0 2
காஸ்மீர் தேசத்திற்கான சிறப்பு அதிகாரத்தை இரத்து செய்வது குறித்து பதவியேற்றவுடன் கொளுத்திபோட்டிருக்கிறது  இந்திய அரசு.
காஸ்மீரிகளின் நியாமான பல போராட்டங்களை ஒடுக்கி, காஸ்மீர் முழுவதும் இராணுவமயமாக்கி, பெரும் ஒடுக்கு முறைகளுக்கு ஆட்படும் மக்களுக்கு மேலும் ஒரு இடியாய் இந்த செய்தியை பிஜேபி அரசு பரிசலித்திருக்கிறது.

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் நிலைகொண்டுள்ளது , காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ளது இந்த ஆக்கிரமிப்பு,
1987ஆம் ஆண்டில் இருந்து 2010மாண்டு வரை காஸ்மீரில் கொல்லப்பட்ட மக்கள் 93,214 பேர்.

விசாரனை என்ற பெயரில் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டவர்கள் 6,969 பேர்.

1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மேலே நான் கொடுத்துள்ளேன்.

விதவைகளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 22,726

கைது செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,17,117

அநாதையாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 1,07,347

பாலியல் வல்லுறவுக்கு ஆக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9,912
இந்த கணக்குகள் தோராயமான கணக்குகளே.
1987-ஆம் ஆண்டு தொடங்கி 2010-ஆம் ஆண்டு முடிய 20 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர். அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது. என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அம்மாநிலத்தில் பல ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில்
“தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஸ்மீரிகள் தங்களின் தனித்த தேசிய அடையாளத்தை துறந்து இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டால்தான் தங்களின் மீதான வன்முறைகளுக்கு எதிராக கூட முறையிடமுடியும்.
பன்னாட்டு முதலைகள், அம்பானி,அதானி வகையாறாக்களின் வேட்டை காடாக மாற்ற திட்டிமிடலின் ஒரு பகுதிதான் சிறப்பு உரிமைகளை திரும்ப பெறபோவதாகவும், அதற்கான பொதுவிவாதத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் இந்திய பிஜேபி அரசு சொல்வதற்கான பின்னனியை நாம் பார்க்கவேண்டும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்தாமல் இதுவரை இந்தியாவின் ஒரு பகுதி என்று அடம்பிடித்தும்,  இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளை காங்கிரசு அரசு என்றாலும், பிஜேபி அரசு என்றாலும் அடிப்படை நேர்மை இன்றி  செய்து வரும் அயோக்கியதனங்களை  பிரித்துபார்க்கமுடியாது.

நல்ல தொடக்கமாக காஸ்மீர் என்ற தேன்கூட்டின் மீது இந்திய அரசு கல்லெறிந்து விட்டது.

அந்த மக்களின் நீண்ட நாள் முழக்கமான “எங்கள் தேசம் காஸ்மீர்  தேசம். இந்திய நாய்களே திரும்பி செல்லுங்கள்”
“இப்பொழுதே வேண்டும் விடுதலை!”
இந்த முழக்கம் மீண்டும் பள்ளதாக்கு எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.
அவர்களின் தேசம் விடுதலையடையட்டும்…
எம் தேசத்தை அங்கிகரிக்கும் முதல் தேசமாக தமிழீழமும்,காஸ்மீரும் மாறட்டும்

“எங்கள் நாடு தமிழர் நாடு”
”இந்தியா என்பது அண்ணிய நாடு” என்ற முழக்கம் எம் தமிழர் தேசத்தில் எதிரொலிப்பது எப்பொழுது..?
நன்றி : எல்லன் எழுகதிர்.

காஸ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 வது சட்டபிரிவு சரியா ? தவறா ?

காஸ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை தரும் அரசியல் சாசன சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்வோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வழமை போல் தெரிவித்துள்ளது.சர்வதிகாரி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள இச்சூழலில் இது குறித்தான விவாதம் அதிகரித்துள்ளது.அதென்ன காச்மீருக்கும் மட்டும் சிறப்பு அந்தஸ்து ? என்று படித்தவர்கள் கூட கேள்வி எழுப்புகிறார்கள் .குர்த்டு தேச பக்தி எனும் வெறியூட்டப்பட்ட நாமும் அதன் மூலகாரணங்கள் என்ன ? என்பதை சிந்திக்க கூட முற்படுவதில்லை.வரலாறு என்னவென்பதையும் அறியாமல்,சட்டமும் புரியாமல் ,உண்மையை ஆராய கூட மனமின்றி குருட்டு தேசபக்தி வெறி கொண்டு அலைகிறோம்.சிறப்பு அந்தஸ்தை பற்றி கேட்டால் காஷ்மீரில் பிறமாநிலத்தவர் இடம் வாங்க முடியாது என்கிறார்கள். உண்மைதான் .ஆனால் காஸ்மீருக்கு மட்டுமா இந்த சலுகை என்றால் நிச்சயம் இல்லை. இன்னொரு மாநிலத்திற்கும் இச்சலுகை உண்டு .அம்மாநிலத்தை பாஜக தான் ஆள்கிறது.அம்மாநிலம் கோவா.காஷ்மீருக்கு சுதந்திரம் கிடைத்தது 1947 இல்.ஆனால் 12.12.1961இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட கோவாவிலும் அம்மாநிலத்தவரை தவிர பிறர் நிலம் வாங்க முடியாது.காஷ்மீரை பற்றி வாய்கிழிய பேசுவோர் கோவாவை பற்றி மௌனம் கொள்வது ஏன்?

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகள் 

இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. சம்மு காசுமீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.இவைதான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகள் .இதை பற்றி பேசுவோர் உலகின் மிகபெரிய திறந்தவெளி சிறைச்சாலையாக காஷ்மீர் இருப்பதை பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.ஆம் அங்கே 6 பேருக்கு 1 ராணுவ வீரன்.இலங்கையில் அமைதிப்படை என்றபெயரில் இந்தியராணுவம் நிகழ்த்திய அத்துனை கொடுரங்களும் காஷ்மீரில் அன்றாடம் நடக்கிறது.ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்தாலும் தேசபக்தி என்ற பெயரால் மூடி மறைக்கபடுகிறது .காஷ்மீரிகளை சூட்டு கொன்று விட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் பட்டம் கட்டி விருது வாங்கி கொண்ட கொடுமையும் நடந்து பின்னர் அது வெளிவந்தது. இந்திய எல்லைகள் பல இருக்க காஷ்மீரில் மட்டும் தான் மிக அதிகமான ராணுவம் நிலைகொண்டுள்ளது ,அப்படி இருக்கும்போது எப்படி எல்லைதாண்டி பயங்கரவாதிகள் வருகிறார்கள் ?அப்படியெனில் எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் என்ன செய்கிறார்கள் ?அவர்களை ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியை யாரும் கேட்பதுமில்லை .கேட்டால் தேசதுரோகி பட்டம் கட்டப்படும் என்ற அச்சம் தான்.இனி வரலாறை பார்ப்போம்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைக்கோடு என்ற ஒன்றை பிரிட்டிஷார் வரைந்து கொடுத்தார்கள் என்றாலும் எந்த சம்ஸ்தானத்தையும் இந்தியாவுக்கு சொந்தம் அல்லது பாகிஸ்தானுக்கு சொந்தமென்று பிரித்துக் கொடுக்கவில்லை. ஒவ்வொரு சமஸ்தானமும் அதனுடைய விருப்பத்துக்கு ஏற்ப எந்த தேசத்தில் சேர வேண்டுமோ சேர்ந்து கொள்ளலாம். அல்லது சேராமல் தனித்தும் இருந்து கொள்ளலாம் என்றுதான் பிரிட்டிஷார் சொல்லியிருந்தார்கள்.

பிரிட்டிஷாரால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவானது பாகிஸ்தான், இந்தியா என்ற இரண்டு தேசங்களாகப் பிரிக்கப்பட்டதில் யாருடன் சேர்வது என்ற பிரச்னை சில மாதங்களிலேயே சுமுகமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு சமஸ்தானத்தைத் தவிர. அதுதான் காஷ்மீர்.

காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தம் என்று வசனம் பேசும் தமிழ்படங்களும் இந்திப்படங்களும் நிறைய காசுப்பார்த்து விட்டன. ஆனால் நமது முதல்பிரதமர் நேரு அப்படிச் சொல்லவில்லை.

ஒரு நெடுங்கதை சீக்கிய மன்னன் ஹரிசிங்கிடம் விசுவாசம் காட்டி ஜம்மு பகுதியைப் பரிசாகப் பெற்றான் குலாப்சிங். டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இவன் ஆங்கிலேயருக்கும் சீக்கியருக்கும் இடையில் மூண்ட போரில் ஆங்கிலேயேருக்கு உதவினான். 

அதாவது அன்றைய கருணா பலனாக ஆங்கிலேயர் காஷ்மீரை அவனிடம் கையளித்தார்கள். இந்து மன்னனான இவன் 87 சதவீதம் முஸ்லீம் மக்களின் ஆட்சியாளராக முடிசூடிக் கொண்டான். அதாவது காஷ்மீர் மக்களால் எவ்விதத்திலும் தேர்ந்தெடுக்கப்படாத தான் தோன்றித் தனமான மன்னராட்சி. இதன் வாரிசுதான் மன்னன் ஹரிசிங்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளோடும் இணைவதில்லை என்ற நிலை எடுத்தான் மன்னன் ஹரிசிங். மன்னனின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து பூஞ்ச் (ஜம்மு) பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம்கான் தலைமையில் ஆயுத எழுச்சி நடத்தப்பட்டது. இவர்களை ஒடுக்கமுடியாமல் மன்னன் திணறினான்.

இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருந்து சுமார் 3000 பழங்குடியினர் படையெடுத்து வந்தனர். அவர்களை ஒடுக்கமுடியாமல் மன்னன் திணறினான்.. மன்னர் இந்திய அரசிடம் ஓடினான். இந்தியராணுவம் அவர்களை விரட்டியடித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்துடன் போர் மூண்டது. 1949 ஜன 1-ல் போர் முடிவுற்றது. இரு ஒப்பந்தங்களுக்கு அந்தப்போர் வழிவகுத்தது.

மன்னன் ஹரிசிங் - பாகிஸ்தான் இடையே 1948 டிச -31ல் அசையாநிலை ஒப்பந்தமும், மன்னனுக்கும் இந்தியாவுக்கும் இணைப்புக்கான ஒப்பந்தமும் போடப்பட்டன.

பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (ஆஸாதி காஷ்மீர் எனப்படுவது) என்றது. ஜம்மு – காஷ்மீர் பகுதியை இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தான் சொன்னது. இருவர் சொன்னதும் உண்மைதான்.

இந்தியாவுக்கும் மன்னனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சொல்வதென்ன?

1. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு சம்மந்தமான அதிகாரங்கள் மட்டுமே இந்தியாவுக்குரியது மற்ற அதிகாரங்கள் காஷ்மீருக்கு உரியது.

இதன்படி அரசியல் சட்டம் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டு சுயாட்சி உரிமைகள் கொண்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமைக்கப்பட்டது.

2. ஜம்மு – காஷ்மீர் மக்கள் மத்தியில் இந்தியாவோடு சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என முடிவு செய்ய பொது வாக்கெடுப்பு நடத்துவது. இதனை ஐ.நா. அவை மேற்பார்வை செய்யும் காஷ்மீர் மக்களின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசுடன் இணைக்கப்படும்.

இந்த இரு கூறுகளையும் நமது முதல் பிரதமர் நேரு வானொலியில் அறிவித்தார். இதை ஐ.நா. அவைக்கும் எடுத்துச் சென்றார். ஐ.நா. அவை இதை ஏற்று இந்தியா பாகிஸ்தான் ஐ.நா. ஆணையம் ஒன்றை அமைத்தது.

இந்நிலையில் காஷ்மீர் தேசிய இன உரிமையை முன்னிறுத்திப் போராடிய அப்துல்லா 1948, மார்ச் 17 பிரதமராக பதவியேற்கிறார். காஷ்மீருக்கு தனிப் பாராளுமன்றம் அமைக்கப்படுகிறது. இளவரசர் கரண்சிங் காஷ்மீரின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய அரசோடு நட்பான ஒரு சுயாட்சிக் குடியரசின் ஆட்சி மலர்ந்தது.

இந்திய அரசின் துரோகப் பட்டியல் :-

1. இன்றுவரை பொதுசனவாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

2. 1949, அக்-17ல் உருவான அசியல் சாசனப்பிரிவு 370ன் கீழான உரிமைகள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டன.

3. ஆக, 8 1953ல் பிரதமர் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர்மீது காஷ்மீர் சதி வழக்கு போடப்பட்டது.

4. அக் 30 1956ல் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த பகுதி என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

5. காஷ்மீர் அரசிடம் அதுவரை இருந்த மாநில உள் விவகாரங்கள் அனைத்திலும் சட்டமியற்றும் அதிகாரத்தை இந்திய அரசு எடுத்துக்கொண்டது.

பின் 1961ல் இந்தியா – பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து காஷ்மீர் தேசிய இனப்பிரச்சினை வெறும் எல்லைத் தகரான சிக்கலாகக் குறுக்கப்பட்டது. 1987க்கு பிறகு வெடித்த ஆயுதந்தாங்கிய காஷ்மீர் விடுதலைப் போராட்டம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. தீவிரவாதம், பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு தேசிய இனப் பிரச்சனை முற்றாக திசை திருப்பப்பட்டது.

இந்தியாவுடனான இணைப்புக்கு ஜம்மு காஷ்மீர் தொடர்பான அரசியல் சட்டப் பிரிவு 370 தான் அடிப்படை. இந்த சட்டப் பிரிவின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் சொத்துகளை வாங்கவோ, குடியேறவோ முடியாது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறவும், சொத்துரிமை பெறவும் முடியும் எனும்போது, அங்கே இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் குடியேற முடியாது என்பது எப்படி சரி என்பதுதான் 370-ஆவது சட்டப் பிரிவை அகற்றக் கோருபவர்களின் வாதம்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைவதா இல்லை தனி நாடாகத் திகழ்வதா என்கிற கேள்வி 1947 பிரிவினையின்போது எழுந்தபோது, ஜம்மு காஷ்மீருக்கு சட்டப் பிரிவு 370-இன் மூலம் தனி அந்தஸ்து தரப்படும் என்கிற வாக்குறுதியின் அடிப்படையில்தான் இந்திய யூனியனில் காஷ்மீர் இணைக்கப்பட்டது. இந்தியாவுடன் இணைவதன் மூலம், இந்தியாவின் பிற பகுதியினர் பெருவாரியாகக் குடியேறினால், "காஷ்மீரியத்' என்கிற தங்களது தனித்தன்மை அழிந்துவிடும் என்கிற நியாயமான பயம்தான் அவர்கள் இப்படியொரு தனி அந்தஸ்து கோருவதற்கு அடிப்படைக் காரணம்.

வட இலங்கையில் ராஜபட்ச அரசு சிங்களர்களைக் குடியேற்றுவதை நாம் எதிர்க்கிறோம். ஏன்? அங்கே தமிழினம் அழிக்கப்படுவதற்கும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் அது வழிகோலும் என்பதால்தான். அதேபோல, இந்தியாவின் பிற பகுதியினர் இங்கே குடியேறாதீர்கள் என்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பிற பகுதியினரின் குடியேற்றத்தால் தங்களது தனித்தன்மை அழிந்துவிடும் என்கிற அச்சத்தில் இருக்கும் நியாயத்தை சிந்திக்க வேண்டும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ அகற்றுவதற்கு காஷ்மீர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில் நியாயம் இருக்கிறது. அவர்களது உரிமை பறி போகிறது; கலாசாரம் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது என்பதால் எதிர்க்கிறார்கள்.

சட்டப் பிரிவு 370 அகற்றப்படுவதால் சராசரி இந்தியர் யாரும் பயனடையப் போவதில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குங்குமப்பூ வயல்களையும், ஆப்பிள் தோட்டங்களையும் வாங்கத் துடிக்கும் பணக்காரர்களும், நிறுவனங்களும்தான் பயனடையப் போகிறார்கள் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

முறையாக தேர்தல் நடத்தப்பட்டபோதெல்லாம், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்து வரும் காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் இதுவரை எந்தவொரு ஆட்சியும் பூர்த்தி செய்யவில்லை.என்பதுதான் மிகபெரும் வேதனை
 

நன்றி :
இனியவன் தமிழன்

நரேந்திர மோடியின் பிரதமராக பதவியெற்றதையோட்டி கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் பாஜவினரின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த முன்னால் மத்திய அமைச்சர் பசனகெளடா பாட்டீல் யத்னாவை போலீஸார் கைது செய்தனர்.

தில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதையொட்டி, பிஜாப்பூரில் பாஜவினர் இனிப்பு வழங்கி, வெடி வெடித்துக் கொண்டாடினர். அப்போது பாஜகவினருக்கும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அது கலவரமாக மாறியது இது தொடபாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைத்தி வந்தனர் .
இதன் நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் சித்தரமையா உத்தரவிட்டிருந்தார்.

அதையெடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த முன்னால் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த பிரமூகர்களில் ஒருவருமான பசனகெளட பாட்டீல் யத்னாலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
உமர் அப்துல்லா - ஆர்எஸ்எஸ் மோதலுக்கு காரணமான அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன?


370 வது பிரிவு உருவானது எப்படி?

இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் அந்த அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன? அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த சில தகவல்கள்...

சுதந்திரத்திற்கு முன்னர் பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ் இருந்துவந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு, இந்தியா உடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக செயல்படுவதா என்ற குழப்பம் நிலவியது.

அப்போது, காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்து, ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார். அப்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறப்பு அந்தஸ்து அளிக்கஅரசியல் சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின் முதன்மை வடிவமைப்பாளரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை வடிவமைக்க மறுத்துவிட்டார். 

அதன்பின்னர் 1949 ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவிடம் பேசி, அம்பேத்கருடன் கலந்து பேசி பொருத்தமான அரசியல் பிரிவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அம்பேத்கர் மறுத்துவிட்டதால், கடைசியில் கோபாலஸ்வாமி அய்யங்காரால்தான் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டது. கோபாலஸ்வாமி அப்போது நேரு தலைமையிலான இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் முன்னாள் திவானாகவும் பதவி வகித்தார்.
370 வது பிரிவு சொல்வதென்ன...?

* இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது. 

* ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 

* ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும். 

* ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும். 

* அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. 

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XXI வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது. 

* முதலில் உருவாக்கப்பட்ட 370 வது பிரிவில், "மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என கூறப்பட்டிருந்தது. 

அதன்பின்னர் 1952 நவம்பர் 15 ல் அதில், அதாவது 370 வது பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, " மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு காஷ்மீர் கவர்னரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என வரையறுக்கப்பட்டது. 

* அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.
- பா. முகிலன்



1947 இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து எந்த ஒரு பாகிஸ்தான் தலைவரும் இந்தியாவின் பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்படாத பொழுது, ஒரு ஹிந்துத்துவா சக்தியான பிஜேபியின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவிற்கு தனது பரம எதிரியாக கருதுகிற பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீஃபை அழைத்ததை உலகமே விந்தையாகப் பார்க்கிற பொழுது, இந்தியாவில் பிஜேபி நாங்கள் அண்டை நாடுகளுடன் நட்பு பாரட்டப் போகிறோம் என ஒரு போலித் தனமான கருத்தை முன் வைக்கிறது. இது உண்மையா என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

நவாஸ் ஷரீஃப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர். மிகப் பெரிய செல்வந்தர், இத்திஹாத் குழுமம் என்கிற தொழிற் குடும்பத்தின் மூத்த மகன். இவர் அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கள் கொள்கையை தான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த எல்லாக் காலங்களிலும் பின்பற்றியிருக்கிறார். அதன் மூலம் மிகப் பெரிய இழப்பை அந்நாடு சந்தித்திருக்கிறது. இப்படிப்பட்ட இவர், சென்ற ஆண்டு நடந்த பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

இந்த முறையும் அவர், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கையிலிருந்து பின் வாங்கவில்லை. இவரது இந்த செயல் திட்டத்தை பற்றி, கடந்த செப்டம்பர் 25, 2013 அன்று வெளியான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை,” பாகிஸ்தான், அதன் திறமையற்ற 35 சதவீத மாநில அரசுகளுக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்க உள்ளது.இதை இன்னும் மூன்று ஆண்டுகளில் விற்று முடிக்க வேண்டும் என அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மின்சார நிறுவனங்கள், பாகிஸ்தானின் மாநில எண்ணெய் நிறுவனங்கள், பாகிஸ்தான் விமான நிறுவனம் மற்றும் இரும்புத் தொழிற் சாலைகள் ஆகியவை அடங்கும்......” எனச் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கலாம். தொடர்பு இருக்கிறது.

அதானி, அம்பானி மற்றும் டாடா
________________________________

அதானி குரூப்ஸ்
_________________

அதானி குரூப்ஸ் என அறியப்படுகிற இந்த தொழில் குடும்பம் மோடிக்கு மிக நெருங்கியவர்கள் ஆவர். மோடியின் தேர்தலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்தக் குடும்பம் தான் செய்து கொடுத்தது என்பதை சில ஊடகங்களில் செய்தியாக வந்ததை அனைவரும் அறிவர். எந்த அளவிற்கு எனில், அதானி குடும்பத்தின் சொந்த விமானத்தில் தான் மோடி சில சமயங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்றால், உறவின் நெருக்கத்தை விளங்கிக் கொள்ளலாம். இந்த அதானி குழுமத்தின் பிரதான தொழில் என்னவென்றால் மின்சாரம் தயாரித்து விற்பனை செய்வது. இதன் மூலம் இவர்கள் பல டிரில்லியன்களை சம்பாத்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கார்பரேட் தொழிற் செய்திகள் படிக்கக் கூடியவர்கள் அறிவர். இந்த அதானிக் குடும்பத்திற்கு தான் நமது பிரதமர் மோடி அவர்கள், குஜராத்தின் முதல்வராக இருந்த பொழுது, கட்ச் பகுதியிலிருந்த விளைச்சல் நிலங்களை தாரை வார்த்தார்.

எப்படித் தெரியுமா?.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் பாகிஸ்தானின் எல்லையோரப் பகுதியான குஜராத்தின் கட்ச் பகுதியின் பாதுகாப்புக் கருதி பண்டிட் ஜவஹர்லால் நேரு பஞ்சாபிலிருந்த சீக்கியர்களை கட்ச் பகுதியில் குடியமர்த்தி, அவர்களுக்கு வாழ்வாதரத்திற்காக அங்குள்ள நிலங்களை இலவசமாக இந்திய அரசு கொடுத்தது. அதை அந்த மக்கள் பன்படுத்தி விளைச்சல் நிலமாக மாற்றி 1947 லிருந்து அனுபவித்து வந்தனர். அந்த நிலங்களைத் தான் தேச பக்தர் நரேந்திர மோடி அவர்கள், அவர்களிடமிருந்து பிடுங்கி விரட்டி விட்டு அதானி குடும்பத்திற்கு மிகச் சொற்பமான விலைக்கு கொடுத்துள்ளார். அங்கு தற்பொழுது 10,000 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின்சார தயாரிப்பு நிலையத்தை அதானி குழுமம் நிறுவி வருகிறது.

பாகிஸ்தானின் எல்லையில் உள்ள இந்த நிறுவனம், தற்பொழுது குறி வைத்திருக்கும் வியாபாரக் களம் அண்டை நாடான பாகிஸ்தான். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, பாகிஸ்தான் தனது மின்சார தயாரிப்பு நிறுவனங்களை விற்க இருக்கிறது என்கிற செய்தி அதானி குழுமத்தின் காதுகளில் எட்டியது தான் தாமதம். கோடிக் கணக்கில் பணம் கொட்டும் வழியறிந்தவர்கள். இந்திய தேர்தல் சந்தையை, தனது இலாபத்தை நோக்கிய பயணத்திற்கு பகடையாக பயன்படுத்தியது. அதற்கு அவர்களுக்கு கிடைத்த மிக நெருங்கிய நண்பர் மோடி அவர்களும் அவர் சார்ந்த பிஜேபி அமைப்பும் துணை போனது. பணம் இந்திய தேர்தலில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு விளையாண்டது. அவர்களின் துருப்புச் சீட்டான மோடி வெற்றி பெற்றார். பிரதமரானார். செய்த உதவிக்கு நன்றி செலுத்தும் வண்ணம் நவாஸ் ஷரீஃப் அழைக்கப்பட்டுள்ளார். அதானி குழுமம் மிக விரைவில் பாகிஸ்தானோடு மின்சார விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மோடியின் ஆசியுடன், அதை இந்திய தேச பக்தர்கள் கண்டு மகிழலாம்.

அம்பானி
_________

பாகிஸ்தான் அதன் மாநில அரசுகளின் பொறுப்பிலுள்ள 35 சதவீத எண்ணெய் நிறுவனங்களை விற்க உள்ளது. இந்திய எண்ணெய் உலகத்தின் ஜாம்பாவான்களான அம்பானி குழுமம், இந்த வாய்ப்பை நழுவ விடுமா என்ன?. ஆகையால் தான், அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியுடன் மிக நெருக்கமாக உள்ள மோடி வெற்றி பெற்றவுடன் செய்த முதல் வேலை நவாஸ் ஷரீஃபை அழைத்தது. பாகிஸ்தானின் வாசல்கள் இந்திய கார்பரேட் நிறுவனங்களுக்கு திறப்பதற்கான திறவு கோல் மோடி அவர்கள் பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார்.

டாடா நிறுவனம்
________________

டாடா என்றாலே ஸ்டீல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பாகிஸ்தானின் ஸ்டீல் மில்ஸ்களும் விற்பனைக்கு வருகிறது. 2013, ஜனவரி 11 முதல் 13 வரை குஜராத்தில் மோடி தலைமையில் “த குளோபல் பிஸ்னஸ் ஹப்” என்கிற பெயரில் மிகப் பெரிய இந்தியத் தொழிலதிபர்களின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான் ரத்தன் டாடா,அதானி குழுமம், அம்பானி சகோதரர்கள் மற்றும் தமிழகத்திலிருந்து சன் குழுமத்தின் மாறன்.
ஒரு வேளை அங்கு தான் இந்திய தேர்தலின் வியூகம் மற்றும் அனைத்தும் திட்டம் தீட்டப்பட்டிருக்குமோ என சந்தேகிக்க வைக்கிறது.

சன் குழுமம்
____________

சன் குழுமத்தின் கலாநிதி மாறனும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். ஸ்பைஸ் ஜெட் விமானத்தை வாங்கியிருக்கும் சன் குழுமம் ஒரு வேளை பாகிஸ்தான் இண்டர் நேசனல் ஏர்லைன்சின் பக்கமும் கால் பதிக்க நினைக்கிறதோ?!. தங்களின் சன் டிவியில் கூட மோடியின் தேர்தல் விளம்பரத்தை போட்டு தங்கள் விசுவாசத்தைக் காட்டியது இதனால் தானோ?!.

இந்தியாவின் தேச பக்தி எனச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்ட பிஜேபி மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இது காலம் வரை பாகிஸ்தானை ஜென்ம எதிரியாகப் பாவித்த காலம் போய், தங்களுக்கு தேர்தலிலே கோடி கோடியாக பணத்தை வாரி இரைத்த கார்பரேட் தொழில் அதிபர்களுக்காக தங்களின் கொள்கையையே மாற்றிக் கொண்டு செயல்படுவதற்கு வைத்திருக்கும் பெயர் தான் அண்டை நாடுகளோடு நட்புறவு. அதற்காக போட்ட கபட நாடகம் தான் சார்க் நாடுகள் வரவேற்பு மற்றும் விருந்து.

அந்நிய நாட்டின் வியாபாரத்தைப் பெற்றுக் கொடுக்கவே இவ்வளவு முனைப்பு என்றால், சொந்த நாட்டில் என்ன என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?!

வாழ்க உங்கள் தேச பக்தி!
கலவரத்துக்கு காரணமான சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி- அதிர்ச்சியில் முசாபர்நகர்வாசிகள்!!

உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகரில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுமோசமான மத வன்முறைகளுக்கு காரணமாக இருந்த சஞ்சீவ் பலியான் மத்திய அமைச்சராக்கப்பட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு முசாபர்நகரில் மத மோதல்கள் நிகழ்ந்தன. இதில் மொத்தம் 67 பேர் பலியாகினர். சுமார் 51 ஆயிரம் பேர் அகதிகளாக்கப்பட்டு இன்னமும் கூட முகாம்களில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

மோதலுக்கு காரணமானவர்கள்

இந்த மதமோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சஞ்சீவ் பாலியான் முசாபர்நகர் தொகுதியிலும் பிஜ்னோர் தொகுதியில் பரதெந்து சிங்கும் போட்டியிட்டு வென்றனர். இவர்களில் சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.


காயங்கள் கிளறிவிடப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த முசாபர்நகர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், எங்களது காயங்களை மீண்டும் கிளறிவிடுவது போல் இருக்கிறது சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது.. முசாபர்நகரில் மத மோதலை உருவாக்கியதற்காகவே அவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது என்று குமுறுகின்றனர்.

என்ன சொல்லுகிறது அரசு?

காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் பாஷா என்ற முகாமில் வசித்து வரும் அர்ஷத் முகமது கூறுகையில், 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன. இந்த மோதலுக்குக் காரணமான ஒருநபரை மத்திய அமைச்சராகுகிறீர்கள் என்றால் இந்த புதிய அரசாங்கம் எங்களுக்கு என்ன மாதிரியான செய்தியை சொல்ல விரும்புகிறது? என்று கேள்வி எழுப்புகிறார்.

துப்பாக்கி சகிதம் பாலியான் சகோதரர்

இதற்கு மாறாக சஞ்சீவ் பாலியானின் சகோதரரோ உற்சாகத்தின் உச்சத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் அவரை சந்திக்க சென்ற போது கைகளில் துப்பாக்கி ஏந்தியபடிதான் அவர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாராம்.

மோடியின் திடீர் முடிவு

"நேற்று காலை 8.30 மணி இருக்கும்.. திடீரென நரேந்திர மோடி, சஞ்சீவ் பாலியானை அழைத்து குஜராத் பவனுக்கு வரச் சொன்னார். எங்களால் இதை நம்பவே முடியவில்லை.. மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறி வீட்டுக்கு வெளியே இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.

அச்சத்தில் சிறுபான்மையினர்

ஏற்னெவே வாழ்விடங்களைவிட்டு முகாம்களில் முடங்கிக் கிடக்கும் சிறுபான்மையினரின் அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில் சஞ்சீவ் பாலியானை அமைச்சராக்கியிருக்கின்றனர்என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்தியாவில் பஜ்ர் தொழுகைக்கு சொல்லப்படும் பாங்கை தடை செய்ய வேண்டும் கடந்த ஞர்யிறு அன்று ஹிந்துத்துவாவினர் மங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் 3 முறை தடை செய்யப்பட்ட பாசிச வெறிபிடித்த காவி இயக்கமான ஆர் எஸ் எஸ் ஆல் வழிநடத்தப்படும் மோடியின் பி.ஜே.பி கட்சி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து இஸ்லாமியர்கள் உலகமெங்கும் கடை பிடித்துவரும் தொழுகைக்கான பாங்கு சொல்வதை தடை செய்ய வேண்டும் என ஹிந்துத்துவாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மங்களூர் டெபுடி கமிஷனர் அலுவலகத்தில் சாமியார் ஒருவர் இந்தியாவில் காலை நேரத்தில் சொல்லப்படும் பஜ்ர் தொழுகைக்கான பாங்கு சொல்வதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தற்கொலை செய்யமுயற்சி செய்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஷ்ட்ரீய ஹிந்து மற்றும் ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பைச்சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.மோடி பதவியேற்கும் நாளுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
10325792_659437067437011_280045290944476463_n
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பைச்சார்ந்த விஜயலக்ஷ்மி என்ற பெண் கூறும் போது: “இந்தியா பல மதங்களை பின்பற்றுபவர்களை உள்ளடக்கியது இஸ்லாமியர்கள் காலையில் பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்கு ஓசையினால் பெரும்பான்மையான இந்து மக்களுக்கு தொல்லையாக உள்ளது எனவே இதை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்” என்றார்.
ராஷ்ட்ரீய ஹிந்து அன்டோலன் என்ற அமைப்பச்ச்சார்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நிறைய பள்ளிவாசல்கள் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அருகில் அமைந்துள்ளது. அதனால் அங்கு சொல்லப்படும் பாங்கினால் பள்ளிக்குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தொந்திரவு ஏற்படுகிறது அத்னால் இதை தடை செய்ய வேண்டும் என்றார்.
கடந்த ஜனவரி மாதம் பாரத் க்ரந்தி சேனாவின் தலைவன் பிரனவானந்தா சுவாமி கிரிஸ்தவர்களின் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி அரசாங்கத்தை வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது .
இச்சூழ்நிலையில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்கை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதில் ஸ்ரீ ராம் சேனா தலைவர் குமார் மலேமர் ஹிந்து யுவசேனா லீடர் நாகேஷ் பஜலேகரி மற்றும் பல ஹிந்துவாதிகள் இதில் கலந்து கொண்டனர்
இந்து முஸ்லிம் கிறிஸ்துவர்கள் என அனைவரும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய நாட்டில் அவர்களுக்கடையே பகை உணர்வை ஏற்படுத்தி மத கலவரங்களை உருவாக்க துடிக்கின்றர் இந்த ஹிந்துத்துவாவாதிகள்.
நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும். இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது போன்று முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் திபாவளியில் பட்டாசு வெடிப்பது போன்ற இந்துக்களின் மத சடங்குகள் குறித்து ஆர்ப்பாட்டம் செய்யலாம். அப்படி எந்த முஸ்லிமும் கிறிஸ்துரும் செய்வது கிடையாது.
இநதிய அரசியல் சாசன சட்டப்படி இந்திய நாட்டில் பிறந்த அனைவருக்கும் அவரவர் மத கடமைகளை நிறைவேற்றுவதற்கு முழு உரிமை உள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்ததும் தனது அடிவருடிகள் மூலம் முஸ்லிம்களின் அடிப்படை மத உரிமைகளை பரிக்க பார்க்கின்றார். இதற்காகத் தான் இவர் ஆட்சிக்கு வந்தாரா ?
Source : http://www.appadiaa.com/hindutva-group-in-mangalore-demands-ban-on-fajr-adhan-across-india/


குஜராத்தில் திடீர் மதக் கலவரம்.. திருமண மண்டபம் தீவைப்பு.. ஞாயிறு நடந்த மோதல்!

ஜராத்தின் அகமதாபாத் நகரில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட திடீர் கலவரத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலவரம் மூண்ட பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதி இளைஞர்களுக்கு இடையே நடந்த மோதலே வகுப்புக் கலவரமாக மாறி விட்டது. இரு தரப்பினரும் கல்வீச்சில் குதித்தனர். இதில் ஒரு போலீஸ் வாகன டிரைவர் காயமடைந்தார். மேலும் சிலரும் காயமடைந்தனர். மூன்று வாகனங்கள், 2 பெட்டிக் கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கலவரம் நடந்துள்ளது. அப்பகுதியில் நடந்த ஒரு திருமணம் தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் சிலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் அடிதடியாக மாறி வகுப்புக் கலவரமாக மாறி விட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் அங்குள்ள பான் கடைக்கு ஒரு இளைஞர் போய் புகை பிடித்துள்ளார். இதற்கு இன்னொரு தரப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஆட்சேபித்துள்ளனர். இதுதொடர்பாக மோதல் வெடித்துள்ளது. இதுதான் பிரச்சினை பெரிதாக காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.

கலவரம் மூண்ட அரை மணி நேரத்திற்குள்ளேயே நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாம். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். யாரும் படுகாயமடையவில்லை என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜேஷ் மக்வானா என்பவர் கூறுகையில், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மோதல் நடந்தது. அதன் பிறகுதான் போலீஸார் வந்தனர். கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரத்தை அடக்கினர்.

கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் கடந்த 12 வருடமாக இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக கலவரம் நடந்துள்ளது.

இங்குள்ள ஒரு திருமணத்திற்கு வந்திருந்த சிலரால்தான் பிரச்சினையாகி விட்டது. கலவரத்தின்போது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மண்டபத்தை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. மண்டபமும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது என்றார்.

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், இரு தரப்பினருமே கல்வீச்சில் ஈடுபட்டனர். இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர். இரு தரப்பையும் சேர்ந்த பெரியவர்கள் தற்போது தலையிட்டுள்ளனர். மத்தியஸ்தம் நடந்து வருகிறது. இரு தரப்பையும் சேர்ந்த இளைஞர்களின் தேவையில்லாத சீண்டல்கள், கேலி கிண்டலால்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டு விட்டது என்றார்.
முசாபர்நகர் கலவரத்தை உருவாக்கியவருக்கு அமைச்சர் பதவி! மோடி நாட்டை என்னவாக்க பார்க்கின்றார் ?

உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகரில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுமோசமான மத வன்முறைகளுக்கு காரணமாக இருந்த சஞ்சீவ் பலியான் மத்திய அமைச்சராக்கப்பட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு முசாபர்நகரில் மத மோதல்கள் நிகழ்ந்தன.
இதில் மொத்தம் 67 பேர் பலியாகினர். சுமார் 51 ஆயிரம் பேர் அகதிகளாக்கப்பட்டு இன்னமும் கூட முகாம்களில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
மோதலுக்கு காரணமானவர்கள்
இந்த மதமோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சஞ்சீவ் பாலியான் முசாபர்நகர் தொகுதியிலும் பிஜ்னோர் தொகுதியில் பரதெந்து சிங்கும் போட்டியிட்டு வென்றனர். இவர்களில் சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
காயங்கள் கிளறிவிடப்படுகிறது..
இது குறித்து கருத்து தெரிவித்த முசாபர்நகர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், எங்களது காயங்களை மீண்டும் கிளறிவிடுவது போல் இருக்கிறது சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது.. முசாபர்நகரில் மத மோதலை உருவாக்கியதற்காகவே அவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது என்று குமுறுகின்றனர்.
baliyanஎன்ன சொல்லுகிறது அரசு?
காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் பாஷா என்ற முகாமில் வசித்து வரும் அர்ஷத் முகமது கூறுகையில், 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன. இந்த மோதலுக்குக் காரணமான ஒருநபரை மத்திய அமைச்சராகுகிறீர்கள் என்றால் இந்த புதிய அரசாங்கம் எங்களுக்கு என்ன மாதிரியான செய்தியை சொல்ல விரும்புகிறது? என்று கேள்வி எழுப்புகிறார்.
துப்பாக்கி சகிதம் பாலியான் சகோதரர்
இதற்கு மாறாக சஞ்சீவ் பாலியானின் சகோதரரோ உற்சாகத்தின் உச்சத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் அவரை சந்திக்க சென்ற போது கைகளில் துப்பாக்கி ஏந்தியபடிதான் அவர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாராம்.
மோடியின் திடீர் முடிவு
நேற்று காலை 8.30 மணி இருக்கும்.. திடீரென நரேந்திர மோடி, சஞ்சீவ் பாலியானை அழைத்து குஜராத் பவனுக்கு வரச் சொன்னார். எங்களால் இதை நம்பவே முடியவில்லை.. மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி வீட்டுக்கு வெளியே இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.
மத கலவரத்தை தூண்டி அப்பாவிகளை கொலை செய்து விட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய மோடி சொன்ன வேலை செய்து முடித்ததற்காக சஞ்சீவ் பலியானுக்கு மோடி அமைச்சர் பதிவ வழங்கியுள்ளார்.
இந்தியாவை கலவர பூமியாக மாற்றி பார்கின்றாரா மோடி ? அதன் மூலம் அவர் என்ன லாபம் அடையபோகின்றார் ?