நிதின் கட்கரி வழக்கும் , கெஜ்ரிவால் சிறையும்

முன்னாள் பா.ஜ.க தலைவர் திரு நிதின் கட்கரி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தில்லி முதல்வருமான திரு அரவிந்த் கேஜ்ரிவால் தனக்கு பெயிலில் பத்திரம் அளித்து விடுதலை பெற‌ கிடைத்த வாய்?..ப்பை, நிராகரித்த கொள்கை நிலைப்பாட்டை, ஆம் ஆத்மி கட்சி முழுமையாக‌ ஆதரிக்கிறது.

கற்றிந்த‌ மாநகர நீதியரசர் அரவிந்த் கேஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க திகார் சிறையில் அடைக்க தீர்ப்பளித்ததை ஆம் ஆத்மி கட்சி ஏற்கவில்லை. இந்த பிழையான தீர்ப்பினை ஆம் ஆத்மி கட்சி சட்ட ரீதியாக எதிர்த்து உயர்நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்யும்.

கேஜ்ரிவாலின் இந்த ஊழல் எதிர்ப்பில் குடிமக்கள் அனைவரும் முழுமனதுடன் ஆதரவு அளிக்க வேண்டும். அப்போது தான் இந்த ஊழல் எனும் தீமையை முற்றிலும் ஒழித்து நாட்டை முன்னேற்ற முடியும். ஆம் ஆத்மி கட்சி இந்த ஊழல் எதிர்ப்பு யுத்தத்தை நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு செல்லும்.

கேஜிரிவால் வழக்கு நாட்டில் ஊழலுக்கு எதிராக பேசுவதும், அதை அம்பலப் படுத்துவதும் குற்றமா என்ற பெரிய கேள்வியை எழுப்புகிறது, என ஆம் ஆத்மி கட்சி காண்கிறது. 2012ல் ஊழல் அம்பலம் ஆனதால் கொண்டதால் பாஜக தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டியிருந்த திரு. நிதின் கட்கரி இப்போது அதே கட்சியால் மத்திய அமைச்சர் ஆகப் போகிறார், ஆனால் அந்த ஊழலை வெளிச்சம் போட்டு காட்டிய கேஜ்ரிவால் சிறைக்குப் போகிறார் என்பது அதிர்ச்சியாக உள்ளது.

கேஜ்ரிவாலில் இந்த போராட்டம் "அவதூறு வழக்கில் ஆஜர் ஆனவர்கள் கூட பெயில் பணம் கட்ட வேண்டுமா?" என்பதை மட்டும் குறித்தது அல்ல, நிரபராதிகாளக இருந்தாலும் பெயில் பணம் கட்ட வசதியில்லை என்ற ஒரே காரணாத்தினால் மட்டுமே வழக்கின் போது சிறையில் தவிக்கும் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற ஏழை மக்களின் உரிமைகளையும் காக்கும் போராட்டமும் ஆகும்.

"குற்றம் செய்யாவிட்டாலும், வெறும் சட்ட நுணுக்கங்களுக்காக, பெயில் என்ற பெயரில், பணம் கட்ட வசதியற்ற ஒருவரை சிறைசாலைகளில் துன்பப்பட விடலாமா?" என கேஜ்ரிவால் நீதித் துறையின் வழிமுறைகளை கேள்வி கேட்கிறார்.

இதற்கு முன்பு இது போன்ற 3 வழக்குகளில், அழைத்த நேரங்களில் ஆஜர் ஆக எழுத்துவடிவில் ஒப்புதல் தெரிவித்ததை ஏற்றுக் கொண்டு, கற்றறிந்த நீதியரசர்கள் கேஜ்ரிவால் பெயில் பணம் கட்ட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை. ஆனால் பணம் கட்டி பெயில் பத்திரம் கொடுக்காததால் இப்போது அவர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார். இந்த வழக்கில் கூட அவர் அத்தகைய எழுத்து வடிவ ஒப்புதல் கொடுக்க சம்மதித்து இருந்தார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.

நேரடியாக ஆஜர் ஆகமாட்டாரோ என்ற பயம் தேவை இல்லாத இடங்களில் கூட காரணாமில்லாமல் ஏதோ சடங்கு போல இயந்திர ரீதியில் பெயிலை வற்புறுத்தும் முறை நீதி வழங்குவதை வெகுவாக பாதிக்கும் என ஆம் ஆத்மி கட்சி கருதுகிறது.

இந்த இயந்திர முறைகள் ஏழை எளிய மக்களை துன்புறுத்துவதோடு மட்டும் இல்லாமல் இந்த அனாவசிய சடங்குகள் கால விரையத்தையும் திணிக்கின்றன.

வாக்குமூலம் கொடுக்கவோ வேறு காரணாங்களுக்காகவோ பிரதிவாதி நேரடியாக வர தேவையில்லை என்ற சந்தர்பங்களில், இத்தகைய வழக்குகளில், அந்த நபர் ஆஜர் ஆவதற்கு பதில் அவருடைய வழக்கறிஞரே அவருக்காக ஆஜர் ஆகலாம் என்பது ஆம் ஆத்மி கட்சியின்
கருத்து.

ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் போராட்டம் ஓயாது! கேஜ்ரிவால் அளிக்கும் செய்தி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடுத்துச் செல்லப்படும்!
"ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் என்ன குற்றமா?" என்ற கேள்விக்கு விடை காணப்படும்!

இப்படிக்கு,

ஆம் ஆத்மி கட்சி, ஊடக குழு

Posted by tamilnadu on 12:30 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "நிதின் கட்கரி வழக்கும் , கெஜ்ரிவால் சிறையும் "

Leave a reply