காவி தீவிரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்ட ராணுவ வீரர் உடல் இன்று கோவை வருகிறது: ஜெயலலிதா ரூ.10 லட்சம் உதவி!!
காவி தீவிரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்ட ராணுவ வீரர் உடல் இன்று கோவை வருகிறது: ஜெயலலிதா ரூ.10 லட்சம் உதவி
சென்னை, ஜூன். 1–
மணிப்பூர் மாநிலம் தியோகோத்தங், சுராசந்த்புர் பகுதியில் காவி தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் ஜி.மோகன்குமார் படுகாயம் அடைந்து வீர மரணம் அடைந்தார்.
அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் கோவை கொண்டு வரப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள், ராணுவ வீரர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் மாலையில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நிகழ்ச்சி நடை பெறுகிறது.
மோகன்குமார் வீர மரணத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மணிப்பூர் மாநிலம், தியோகோத்தங், சுராசந்த்புர் பகுதியில் காவி தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் மோகன்குமார் படுகாயமடைந்து 29.5.2014 அன்று வீரமரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
காவி தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மோகன் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராணுவ வீரர் மோகன் குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிக்குமாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச் சாலைகள் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நான் உத்தர விட்டுள்ளேன்.
காவி தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மோகன்குமாரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா அதில் கூறி உள்ளார்.
நாட்டில் காவி தீவிரவாதம் வளர்த்து கொண்டு இருப்பது கவலை கூறியது.
0 comments for "காவி தீவிரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்ட ராணுவ வீரர் உடல் இன்று கோவை வருகிறது: ஜெயலலிதா ரூ.10 லட்சம் உதவி!!"