பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகத்தில் 19 பேர் முதலிடம் பெற்று சாதனை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 19 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்றவர்கள் 499 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளைப் பெற பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 53576 என்ற எண்ணுக்கு SSLC என டைப் செய்து தங்களது பதிவு எண்ணையும் மாணவர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
அதேபோல், 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD என டைப் செய்து மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
0 comments for "பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகத்தில் 19 பேர் முதலிடம் பெற்று சாதனை"