மோடி அரசின் சாதனை(?)
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கட்சி ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த எம்.பிக்களில் மூன்றில் ஒரு பங்கு எம்.பி க்கள் கிரிமினில் குற்றவாளிகளாக இருப்பவர்கள் என ஹிந்து பத்திரிக்கை செய்தி வெளியிடுட்டுள்ளது.
Association for Democratic Reforms என்ற அமைப்பு எம்.பிக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஆய்வு செய்ததில் தற்போது உள்ள எம்.பிக்களில் 34 சதவிகிதம் பேர் கிரிமினல் குற்றாளவிகளாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக மோடியின் பி.ஜே.பி எம்.பி க்களில் 35 சதவிகிதம் பேர் கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். அதாவது மோடியின் பி.ஜே.பி எம்.பி க்களில் 35 சதவிகிதம் பேர் கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
இதுவரை இல்லாத அளவிற்கு கிரிமினல் எம்.பிக்களின் சதகிவிதம் அதிகரித்துள்ளதாக Association for Democratic Reforms அமைப்பு தெரிவித்துள்ளது. காரணம் மோடியின் பி.ஜே.பி கட்சி ஆட்சியை பிடித்திருப்பது. மோடி வந்ததும் நாட்டு மக்களின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க வில்லை. கிரிமினல் எம்.பிக்களின் விகிதம் தான் அதிகரித்துள்ளது. இது தான் மோடி அரசின் சாதனை!
0 comments for "மோடி அரசின் சாதனை(?)"