கோத்ரா தொடர் வண்டி தீவைப்பு நிகழ்வு மற்றும் அப்பாவிகள் விடுதலையும்.!!


கோத்ரா, அக்‌ஷர்தம், ஹரேன் பாண்டியா’

மூன்று வழக்குகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் படி குஜராத் காவல் துறை கட்டாயப்படுத்தினர்;
11ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டவர்களின் கண்ணீர் பேட்டி!

கோத்ரா தொடர் வண்டி தீவைப்பு நிகழ்வு...
அக்‌ஷர்தம் ஆலயம் வெடிகுண்டு தாக்குதல்..
ஹரேன் பாண்டியா கொலை...
இந்த மூன்று வழக்கில் எந்த வழக்கில் பிரதியாக சேர விருப்பம்? என்பதனை தெரிவிக்கும் படி குஜராத் காவல் துறை தன்னிடம் கேட்டதாக அக்‌ஷர்தம் ஆலய தீவிரவாத தாக்குதலில் உச்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்ட ஆறு பேர்களில் ஒருவரான முஹம்மது சலீம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அக்‌ஷர்தம் ஆலய தாக்குதல் வழக்கில் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் முஹம்மது சலீம்.
மே 16ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.

முஹம்மது சலீம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தாவது;
“பாஸ்போர்டில் சில பிரச்சனைகள் உள்ளது என்று கூறி குஜராத் காவல் துறையால் தான் கைது செய்யப்படும் வேளையில் 13 வருடங்களாக சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தேன்.
என்னை மிருகத்தனமாக அடித்து துன்புறுத்தினார்கள்,அதன் தழும்புகள் இன்றும் என் முதுகில் உண்டு.என்னுடைய கால் எலும்பையும் அடித்து நொறுக்கினார்கள்.
அக்‌ஷர்தாம் ஆலய தாக்குதல் வழக்கிலா
ஹரேன் பாண்டியா கொலை வழக்கிலா
அல்லது கோத்ரா தொடர் வண்டி தீவைப்பு வழக்கிலா?
எதில் உன்னை பிரதியாக்க வேண்டும் என்று என்னோடு கேட்டார்கள்.
நான் என்ன பதிலை சொல்வது என்று திகைத்து நின்றேன்”

கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து முஹம்மது சலீமுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தற்போது 10 வயதாகிறது.
சிறையினிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னரே முதன் முறையாக தனது மகளை பார்த்திருக்கிறார்.

காவல்துறையினரின் காவலில் இருக்கும் போது மூன்று நாட்களாக தொடர்ந்து தன்னை நிர்ப்பந்தப்படுத்தி காவல் துறை ஏற்கனவே தயாராக்கி வைத்திருந்த கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள்.

இந்த கடிதத்தினையே பின்னர் அக்‌ஷர்தம் ஆலயத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள் என்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்ப்பட்ட அப்துல் கையூம் என்பவர் தெரிவித்தார்.
மேலும்

“என்னுடைய விடுதலை என்பது சிறைக்கம்பிகளில் இருந்து திறந்துவிடப்பட்ட ஓர் சாதாரண நிகழ்வு மட்டுமே..
கடந்த பதினொன்று வருடங்களாக நீதி என்பது ஒவ்வொரு நிமிடத்திலும் புதைக்கப்பட்டு வருகிறது... ” என்றும் அப்துல் கையூம் தெரிவித்த போது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கணத்த மெளணமே பதிலாக இருந்தது.

எல்லன் எழுகதிர்

Posted by tamilnadu on 10:21 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "கோத்ரா தொடர் வண்டி தீவைப்பு நிகழ்வு மற்றும் அப்பாவிகள் விடுதலையும்.!!"

Leave a reply