மீத்தேன் கிணறு மற்றும் நிலநடுக்கம்.




இது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீத்தேன் கிணறுகள் உள்ள பகுதியின் படம்.தற்போது இந்த பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. கடந்த 28 ஆம் தேதி அதிகபட்சமாக 3.6 ரிக்டர் பதிவாகியுள்ளது. 

இந்த பகுதியில் பல இலட்சம் ஏக்கர்கள் பூமியை துளையிட்டு 600-க்கு மேற்பட்ட நச்சு இரசாயனங்களை செலுத்தி மீத்தேன் வாயு எடுக்கப்படுகின்றது. 

இப்படி செலுத்தப்படும் இந்த இராசயனங்கள் அரைகுறையாக வெளியே எடுக்கப்பட்டு அருகில் உள்ள ஏரி,குளம் மற்றும் நிலப்பரப்புகளில் கொட்டப்படுவதால் அந்த பகுதியின் நீராதரங்கள் முழுக்க ( நிலத்தடி நீர் உட்பட) இரசாயனங்கள் கலந்துள்ளது. வெளியே எடுக்கப்படாத இரசாயனங்கள் அருகே இருக்கும் நீராதங்களில் கலந்துள்ளது.

சுற்று வட்டாரத்தில் இருக்கும் வீடுகளிலுள்ள தண்ணீர் குழாய்களில் மீத்தேன் வாயுக்கள் வெளிபடுகின்றது.

மேலும் ஆழ்துளையிடப்படுவதால் நிலநடுக்கம் அதிக அளவில் ஏற்பட்டுவருகின்றது. இதனால் அந்த பகுதியிலுள்ள மக்கள் மீத்தேன் எடுப்பதற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழகத்தின் தஞ்சை,மன்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன.. பொன் விளையும் நம் தாய் மண் இப்படியாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் நமது தஞ்சை டெல்டா பகுதி வறண்ட பாலைவனமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.. அதை தடுத்து நிறுத்துவது நம் கையில் உள்ளது. கைகோர்ப்போம். தாய் பூமியைக் காப்போம்.

இந்த விழிப்புணர்வு பதிவினை பகிர்ந்து உதவுவுங்கள்.

Oops. Methane Leakage from Fracked Wells “Alarmingly high..”
August 7, 2013

காணொளி பார்க்கவும்: .

http://youtu.be/4LBjSXWQRV8

Posted by tamilnadu on 8:57 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "மீத்தேன் கிணறு மற்றும் நிலநடுக்கம்."

Leave a reply