உண்மையும் பொய்யும்!



"பேஸ்புக்கில் இணைந்ததால் சிரியாவில் ஒரு பெண் கல்லால் அடித்துகொலை"

மேற்படி தலைப்பில் ஒரு தகவல் பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் மிக வேகமாக பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை சில இணையத்தளங்களும், முகநூல் குழுமங்களும் எவ்வித ஆதாரமும் இன்றி, கொஞ்சமும் ஆராயாமல் வெளியிட்டு வருகின்றன.

சிரியா இஸ்லாமிய முஜாஹிடீன்களையும், இஸ்லாமிய போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக மேற்படி தகவல் ஷீஆ ஆதரவு ஊடகங்களால் உருவாக்கப் பட்டு பரப்பப் பட்டு வருகின்றது. அதன் உண்மை தன்மையை அறியாமல், ஆராயாமல் பல்வேறு தரப்புக்களாலும், தனிநபர்களாலும் மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும்! எவ்வித ஆதாரமுமற்றதாகும்!!!

இன்று சிரியா நாடு இருக்கும் நிலையில், பெரும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கவே நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில், எவ்வித அரச நிறுவனங்களும் ஒழுங்காக செயல்படாத நிலையில், இது போன்ற விடயங்களை விசாரிக்க எவ்வித நீதிமன்றகளும் இல்லை. சிரியாவில் பாடசாலைகளே ஒழுங்காக செயல்படுவதில்லை.

மேற்படி போலியான தகவலுக்காக இணைத்து வெளியிடப்பட்ட புகைப் படத்தினைக்கொண்டே அது எவ்வளவு தூரம் போலியானது என்பதனை புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் அந்தப் புகைப்படம், ஒரு பெண்ணை கல்லால் அடித்து கொல்வது போன்ற காட்சி ஆகும், இது ஒரு சினிமா படத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அந்தப் படத்தின் பெயர் "The Stoning of Soraya M". அந்தக் காட்சியில் நடித்தவர் Mozhan Marno என்ற ஈரானிய நடிகை ஆவார்.

2010 ஆம் ஆண்டு சைரஸ் நவ்ரஸ்தேஹ் என்பவரால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப் படத்தில் ஈரானில் உள்ள ஒரு கிராமத்தில் மேற்படி கதை நடப்பதாக ஒரு காட்சி அமைத்திருந்தார்கள். அப்போது அந்தப் படம் ஈரானில் தடை செய்யப்பட்டு இருந்தது.

மேற்படி திரைப்படம் குறித்த மேலதிக தகவல்களை இந்த இணைப்பில் சென்று பார்வையிடலாம்.

http://en.wikipedia.org/wiki/The_Stoning_of_Soraya_M.

Posted by tamilnadu on 11:45 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "உண்மையும் பொய்யும்!"

Leave a reply