தென்கிழக்காசியாவையும் இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளையும் துறைமுகங்கள் மற்றும் கடல்வழி இணைப்பை ஏற்படுத்தும், சீனாவின் இலட்சியமான கடல்வழி பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன்னோடியாக 1.6 பில்லியன் டொலர் நிதியத்தை சீனா நேற்று உருவாக்கியுள்ளது.
இந்த 1.6 பில்லியன் டொலர் நிதியம், பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் உள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும்.
பட்டுப்பாதைத் திட்டத்தின் மூன்று முக்கியமான பிராந்தியங்களில் ஒன்றான, சீனாவின் கரையோர பியூஜியன் மாகாணத்தில் இதுதொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமாக இந்த கடல் பட்டுப்பாதை திட்டம் அமையவுள்ளது.
சீனாவையும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தையும் இணைத்த பழங்கால பட்டுப்பாதையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, இந்தியப் பெருங்கடலில் உள்ள தென்கிழக்காசிய நாடுகளையும் தனது கரையோரப் பகுதிகளுடன் இணைக்கும் சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்குவதிலும் சீனா ஆர்வம் கொண்டுள்ளது.
சீனா ஏற்கனவே துறைமுக கட்டுமானங்களில் ஈடுபட்டுள்ள, பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், ஆகிய நாடுகளில் இந்த உட்கட்டுமான திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.
எவ்வாறாயினும் இந்த திட்டம் தொடர்பாக இந்த மாத முற்பகுதியில், சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்ட வரைபடத்தில் பாகிஸ்தானின் குவடார் துறைமுகம் இடம்பெறவில்லை.
நெருக்கமான வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்த சீனா விரும்பும் துறைமுகங்களாக, கொல்கத்தாவும், கொழும்பும் குறிப்பிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
1:35 AM /
0
comments
/
Read more
மத்திய நைஜீரிய நகரமான ஜோஸ் இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தபட்சம் 118 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பயணிகளும், வர்த்தகர்களுன் நிறைந்திருந்த வர்த்தக நகரில் இடம்பெற்ற இக்குண்டுவெடிப்பை இதுவரை யாரும் உரிமைகோரவில்லை எனினும் போக்கோ கராம் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் நடவடிக்கையாகவே இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
‘ஜோஸ் நகரில் உள்ள சந்தைப்பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற 20 நிமிடங்கள் கழித்து, வெடிகுண்டு நிரப்பப்பட்ட மினி பேருந்து ஒன்று வெடித்து சிதறியது.
இந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி, அப்பகுதிகளில் நின்றுகொண்டிருந்த 116 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 45 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல்களில் பலியானவர்களில் பெண்களே அதிகம்.’ என நாட்டின் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அரசு நைஜீரியாவிற்கு இராணுவத்தையும் பாதுகாப்பு ஆலோசகர்களையும் அனுப்பிவைத்துள்ளது. பிரித்தானிய அரசும் அமெரிக்காவைப் தொடர்ந்து பாதுகாப்புப் படைகளை அனுப்பிவைத்துவிட்டு தாம் வாஷிங்டனுடன் இணைந்து வேலைசெய்வோம் என்கிறது.
இவ்வாறான சூழலிலேயே இக் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் போக்கோ ஹராம் அமைப்பை வளர்த்தன் பின்புலத்தில் யார் செயற்பட்டார்கள் என்பது பிரதானமான கேள்வி.
அந்த அமைப்பிற்கு ஆயுதம் மற்றும் பண உதவிகளை சவூதி அரேபியாவிலுள்ள பல இஸ்லாமிய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. சிரியாவில் அசாத்தின் சர்வாதிகார அரசிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துவரும் அமெரிக்க ஆதரவு இஸ்லாமியப் பயங்கரவாதக் குழுக்களுக்கும் இதே சவூது அரேபியக் குழுக்கள் தான் உதவி செய்து வருகின்றன. அமெரிக்காவின் நெருங்கிய பங்காளி நாடான சவூதி அரேபியா, மத்திய கிழக்கில் அமெரிக்க சார்பு அரசுகளுக்கு இராணுவ உதவியும், அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கும் பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
2012 ஆம் ஆண்டு அமெரிக்க ஹில்லாரி கிளிங்டன் பதவியிலிருந்த வேளையில் போக்கோ ஹராம் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக தரப்படுத்துவதற்கு மறுப்பு வெளியிட்டார். அதனை பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யுமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அதனை மிகவும் தீவிரமாக அவர் மறுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க எண்ணிய போது மட்டுமே அமெரிக்க அரசு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தோரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
11:15 PM /
0
comments
/
Read more
மலேசிய விமானம் MH370 காணாமல் போய் 68 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
இந்து சமுத்திரத்தில் தற்போது தேடப்பட்டு வரும் கடற்பகுதியிலிருந்து சுமார் 1400 கி.மீ வடக்கில் விமானத்தின் உதிரிப் பாகங்கள் இருக்கலாம் என இந்தியாவின் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெயாபிரபு தெரிவித்துள்ளார்.
சீனாவின் கட்டற்படைக் கப்பல் ஒன்று தொடர்ந்து இவ்விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் சிறிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று தேடுதலில் ஈடுபட்ட போது சேதமானதால் ஆஸ்திரேலிய கடற்படைத் துறைமுகத்திற்கு திருத்தப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதோடு ஆஸ்திரேலிய - சீன மீட்பு படைகள் தேடுதலை தொடர்ந்து முன்னெடுக்க பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையிலேயே இந்தியாவைச் சேர்ந்த அறிவியலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8ம் திகதி காணாமல் போன குறித்த மலேசிய விமானத்தில் 239 பயணிகள் சென்றனர். அவர்களில் ஐவர் இந்தியர்கள் ஆவார்கள்.
5:23 AM /
0
comments
/
Read more