சென்ட்ரல் குண்டு வெடிப்பிற்கும் சிதம்பரம் குண்டு வெடிப்பிற்கும் உள்ள ஒற்றுமை!!



சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று (01/05/2014) காலை 7.25 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்திவாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன. 

இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். 13 பேர் காயமடைந்தனர்.

இந்தியாவில் அவ்வப்போது மனித குல விரோதிகளால் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட போதும், 1998 – ன் துயர சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில், இத்தகைய கோர நிகழ்வுகள் ஏதும் நடந்திராதது நமக்கு ஆறுதலை அளித்தது. ஆனால் இன்றைய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், போலி என்கவுண்டர்கள் ஆகிய அசம்பாவிதங்கள் அனைத்தின் பின்னணியிலும், சங்க பரிவார சக்திகள் மூளையாக செயல்பட்டன என்பதனை ஆர்எஸ்எஸ் அசிமானந்தாவின் வாக்கு மூலமும், பிரக்யா சிங், கர்னல் புரோகித் ஆகியோரின் கைதுகளும் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும், பாஜகவினரோ அல்லது அதன் பரிவாரங்களோ இலாபம் அடைந்துள்ளனர் என்பதனை இந்திய அரசியலை நன்கு அறிந்த எவரும் மறுக்க இயலாது. அரசியல் இலாபத்திற்காக மக்களை பலி கொள்ளும் கோர அரசியல், இந்துத்துவ சக்திகளுக்கு சாதாரண விஷயமாய் ஆனது இந்தியாவின் சாபக்கேடே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?


மோடிVs லேடி

தேசிய அரசியல் களம் சூடு பிடித்து, அடுத்த பிரதமர் தான்தான் என்ற கனவில் மிதக்கும் நரேந்திர மோடிக்கு, கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் அவரது நம்பிக்கைக்குரிய சகோதரி ஜெயலலிதா, “வளர்ச்சியின் நாயகர் மோடியா இந்த லேடியா?” எனக் கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இதன் பின்னணியில் மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க தயார் நிலையில் உள்ளதும், அதன் மூலம் “ஜெ”வை பிரதமராக தேர்வு செய்து பாஜகவின் கனவை தகர்ப்பதற்கும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், “அதிமுக ஆதரவு தங்களுக்கு தேவைப்படாது” என்ற மோடியின் பதிலடி கூறப்பட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

பின்னணியில் முன்னணியா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் நெடுங்காலம் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம், அக்கூட்டணியை விட்டு வெளியேறிய போது, 27 அக்டோபர் 2013 அன்று பீகாரில் குண்டு வெடித்தது நினைவிருக்கலாம். பிஹாரின் சட்ட ஒழுங்குகளை குறை கூற இந்த குண்டு வெடிப்பை பாஜகவினர் பயன்படுத்தினர்.

ஆனால் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.

அதே போன்றதொரு சூழ்நிலை தற்போதும் நிலவுவதால், கூட்டணிக்கு போகாமலேயே எட்டி உதைத்த அதிமுகவிற்கு பாடம் கற்பிக்க இரயில் நிலைய குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இயல்பாய் எழுகிறது.

ஊடகத்திலுள்ள பாசிச சக்திகளின் துணையுடன் வழக்கம் போல் இந்த குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்கள் மேல் பழியைப் பரப்பி, ஜெயாவிடம் முஸ்லிம் எதிர்ப்பை ஏற்படுத்தி பாஜக பரிவாரங்கள் அதிமுக ஆதரவைப் பெற முயற்சி செய்கிறார்களா என்றும் ஆராய வேண்டும்.

நேர்மையான விசாரணை நடந்து, குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவார்களா? அமைதி தவழும் பூங்காவாய் தமிழகம் நிலை நிற்குமா?

அமைதி தவழும் பூமியை அனைவருக்கும் கேட்போம்!

சிதம்பரம் குண்டு வெடிப்பு: 

பல்கலை கழக ஊழியர் மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தீவிர தொண்டர்  பன்னீர் செல்வம்

மாரியப்பா நகர் 2 வது தெற்கு குறுக்குத் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும் ஆனா மற்றும் 
ஆர் எஸ் எஸ் அமைப்பின் தீவிர தொண்டர் பன்னீர் செல்வம் வீடு உள்ளது.


இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு இவர் ஆட்டோ நகரில் அவர் வசிக்கிறார் .

வாடகை வீட்டை அவர் கொடுத்து இருப்பது சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்புக்கு வெடிகுண்டு கொடுத்து உதவிய மக்கள் சந்தேகிக்கும் நபரான ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொண்டர்  அருள் பிரசாந்த்திர்க்கு கொடுத்து உள்ளார்.

எதற்கு ? எதற்காக அங்கு குண்டு தயாரிக்கவேண்டும் ? யார் தூண்டதில் வாடகைக்கு வீடு கொடுக்கப்பட்டது ?? என்ற கேள்விக்கு விடை இன்று வரை தெரியவில்லை.

இந்த வெடிகுண்டு தயாரிப்பு வெடிக்க முதல் சோதனைதான் சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்பா? இல்லை திட்டம் இட்டு செய்த செயலா என்ற கேள்விக்கு விடை இன்று வரை தெரியவில்லை?

இந்த வெடிகுண்டு வாங்க சென்ற பிரபல ரவுடி  மோகன்ராம் படுகாமடைந்தது உள்ளான்.





யார் இந்த மோகன்ராம் ?


தேடப்பட்டு வரும்  பயங்கரவாதி மோகன்ராம் அவான்.

சிதம்பரம் மாரியப்பன் நகர் 2வது குறுக்குத்தெருவை சேர்ந்த புரபசர் பன்னீர்செல்வம் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த வீட்டில் இன்று வெடிகுண்டு வெடித்தது. வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்தார். 

அவரை அறையில் இருந்து சிலர் ஆட்டோவில் ஏற்றிச்சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஓடிவிட்டனர்.

அந்த மர்ம நபர்கள் குறித்தும், குண்டுவெடிப்பு குறித்தும் போலீசார் விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், படுகாயமடைந்த அந்த நபர் திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் என்று தெரியவந்துள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி மெட்ராஸ் பாண்டியின் கூட்டாளி இவன் என்பதும் தெரிய வந்துள்ளது. இவன் மீது 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

அந்த வீட்டில், டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, கைதுப்பாக்கி இருந்துள்ளது. அவற்றை போலீசார் கைப்பற்றி யுள்ளனர். மேலும்,ஒரு டிபன் பாக்ஸ் குண்டு தயாரிக்கும்போதுதான் அது வெடித்துள்ளது என்றும் விசார ணையில் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் ரவுடி ஏன் சிதம்பரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தான்? எந்த நோக்கத்திற்காக துப்பாக்கி, டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் தயாரித்தான்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருந்த மோகன்ராம், குண்டுவெடிப்பின் மூலம் சிக்கியுள்ளான்.


இவனை குண்டுவாங்க யார் அனுப்பினார்கள் ??என்ற கேள்விக்கு விடை இன்று வரை தெரியவில்லை.


இதை தொடர்ந்து நடந்த அடுத்த சம்பவம் நமக்கு பல கேள்வி எழுப்புகிறது.


சுரேஷ்

வெடிகுண்டு புரளி: 

திருச்சி சேர்ந்த ஆர் எஸ் எஸ் தீவிரவாதி அமைப்பின் மீது பற்று கொண்ட தான் பிரபலம் ஆகணும் என்று எண்ணம் கொண்ட சுரேஷ் ஈனச்சயாலா இல்லை உண்மையில் அங்கு குண்டு வெடிக்குமா ??? என்று பதற்றம் ஏற்பட்ட நாள் தான். 

எதற்கு புரளி???? யாரை சிக்க வைக்க இந்த புரளி?? 

இந்த புரளி பின்னணி என்ன ?  என்ற கேள்விக்கு விடை இன்று வரை தெரியவில்லை.

அதை தொடர்ந்து சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு பீதி கிளப்பிய சிவக்குமார் என்ற நபர் கைது...!!!!!

மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை டோல்கேட்டில் சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த பஸ்சை சோதனையிட்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் அந்த பஸ்சில் பயணம் செய்வது தெரியவந்தது. அவனை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அவன் பெங்களூரை சேர்ந்தவன். பெயர் சிவக்குமார் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. 

வனிடம் ஏராளமான சிம் கார்டுகளும் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிவக்குமாரை விசாரணைக்காக போலீசார் சென்னை அழைத்து சென்றுள்ளனர்.

யார் இந்த சிவகுமார் ? எதற்கு இந்த மிரட்டல் என்று கேள்விக்கு பதில்வராமல் மீடியா மற்றும் காவல்துறை மறைத்துவிட்டது.




சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றும் இதில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழன் ஜாகிர் கைது அவனிடம் நடத்திய விசாரணை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று டி ஜி பி ராமானுஜம் கூறியுள்ளார். 

இதை தொடர்ந்து புதிதாக சித்திக் என்ற நபர் கைது பின்பு விடுதலை.


இந்த படத்தில் ஓடியவர் கேரளாவை சேர்ந்த ஐ.டி பொறியாளர் ஆவார், அன்று விடுமுறைக்காக இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த அவர், ரயில் தாமதமானதால் விமானத்தை பிடிக்க ஓடியிருப்பதும் தெரியவந்து அவர் விடுதலை ஆனார்.

மற்றும் சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்புக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித சம்பதமும் இல்லை.ஊடகத்துறை மட்டும் தான் இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறது ...
காவல்துறை இந்த குண்டு வெடிப்பில் முஸ்லிம்களை சம்பதபடுத்தி அறிக்கை வெளியட வில்லை மீடியாவின் கூற்றும் காவல்துறை கூற்றுக்கு முரண்தான் என்று பகிரங்கமாக சத்தியம் டிவி விவாதத்தில் வாதிட்டார் முன்னாள் காவல்துறை DJP அதிகாரி
திரு.கருணாநிதி மேலும்  கோவை குண்டு வெடிப்புக்கு பிறகு கோவை இன்று வரை அமைதியாக இருப்பதற்கு காரணம் முஸ்லிம்கள்.தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்கள் தான் என்ற எண்ணம் முதலில் அழிக்க பட வேண்டும் என்று கூறினார்.

சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும் 
---------
விடை தெரியாத கேள்விகள் இன்று வரை.

சிதம்பர குண்டு வெடிப்பு பற்றி ???

யார் அந்த அருள் ??? அவன் எதற்கு வெடி குண்டு தயார் செய்தான் ? யார் குண்டு தயாரிக்க கற்று கொடுத்தது.

யார் அந்த பன்னீர் செல்வோம் ??? எதற்கு வெடி குண்டு தயார் செய்ய வீடு வாடைகைக்கு கொடுத்தான் ???

யார் அந்த மோகன்ராம் ?? எதற்கு அருளிடம் வெடி குண்டு வாங்க சென்றான் ???

எதற்கு சிவகுமார் வெடிகுண்டு வெடிக்க போகுது என்று போன் செய்யவேண்டும் ???

அஸ்ஸாம் முஸ்லிம்களின் படுகொலைக்கு மோடியின் வெறுப்பு பேச்சே காரணம் - அஸ்ஸாம் முதல்வர் NDTV க்கு பேட்டி கொடுத்தாரே அப்போ சென்ட்ரல் வெடி குண்டு மோடிதான் காரணமா ???

சென்னை சென்ட்ரலில் வெடித்த குண்டுகளும் பாட்னா குண்டுகள் ஒன்று புலன் விசாரணை உறுதியானது. சென்ட்ரல் குண்டு வெடிப்புக்கு காரணம் கோபால் குமார் கோயல்
*கணேஷ் பிரசாத் *பவன்குப்தா *விகாஸ்குமார்.அப்போ இவர்கள் சென்ட்ரலில் குண்டு வைத்தார்களா ???

மதுரை மாட்டுத்தாவணி தகர்க்க சதி செய்து பின்பு அது தோல்வி அடைந்து என்ன செய்வது என்று திகைத்த தீவிரவாதி சுரேஷ் கொடுத்த புரளி பற்றி தற்போது செய்தி என்ன ???

அஜய் அலவா (வயது 19) என்றும், 12–ம் வகுப்பு மாணவர் ஒரு பை நெறைய ஆய்வுதம் வைத்து டெல்லில ஒரு நபரிடம் கொடுக்க நின்று கைது செய்ய பட்டார் ??? யார் அவன் ???

தேர்தல்களை சீர்குலைக்க சதி' என்னும் தலைப்பில் 'நக்சல்கள்' சம்பந்தமான , 07.05.2014 தினமணி நாளிதழில் பக்கம் 11 வெளியாகியுள்ளது. யார் அந்த நக்சல்கள் ???

முத்துப்பேட்டையில் வெடிப் பொருட்கள் பதுக்கல் என்று 13.10.2013 தீவிரவாதி ஜெயபால் என்பவர் கைது செய்யப்பட்டார் ????மேற்கொண்டு சென்ட்ரல் வெடிகுண்டு பற்றி இவரிடம் விசாரணை இருந்ததா ???

சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த தீவிரவாதி யமுனா என்ற பெண் 19-10-2013 அன்று கைதுயானால் மேற்கொண்டு சென்ட்ரல் வெடிகுண்டு பற்றி இவரிடம் விசாரணை இருந்ததா ???

தன் வீட்டு மீது குண்டு வீசிய திண்டுக்கல் தீவிரவாதி மற்றும் பாஜகவை சேர்ந்து தீவிரவாதி பிரவீண்குமார் கைது ஆனார் . மேற்கொண்டு சென்ட்ரல் வெடிகுண்டு பற்றி இவரிடம் விசாரணை இருந்ததா ??? 

நாம் தான் மக்கள் நாம் தான் நீதிபதி...........

Posted by tamilnadu on 11:20 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "சென்ட்ரல் குண்டு வெடிப்பிற்கும் சிதம்பரம் குண்டு வெடிப்பிற்கும் உள்ள ஒற்றுமை!!"

Leave a reply