வாக்குபதிவு எந்திரத்தை வீட்டிற்க்கு எடுத்து சென்ற தேர்தல் அதிகாரி!

வாரணாசி;
வாக்குபதிவு எந்திரத்தை வீட்டிற்க்கு எடுத்து சென்ற தேர்தல் அதிகாரி!
வாக்குபதிவு எந்திரத்தை வீட்டிற்க்கு எடுத்து சென்றதுடன்,அதன் முன்னிலிருந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த தேர்தல் கண்காணிப்பு அதிகாரிக்கும் அவரது மகனுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாரணாசியில் தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரியான அவதேஷ் குமார் ஸ்ரீவாஸ்தவா, மற்றும் அவரது மகனும் பொறியியல் மாணவருமான கெளரவ் ஆகியோர்களுக்கு எதிராகவே வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததுடன் புகைப்படத்தின் அடியில் “ஆப் கி பார் மோடி சர்க்கார்” என்ற குறிப்பினையும் கெளரவ் சேர்ந்திருந்தார்.
வாக்குபதிவு எந்திரங்களுக்கு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் சம்பவித்தால் அவற்றிற்க்கு மாற்றாக பயன்படுத்திக்கொள்ள இரண்டு வாக்கு பதிவு எந்திரங்கள் ஸ்ரீவாஸ்தாவிற்க்கு வழங்கப்பட்டிருந்தது.
பிரத்யேக அறையில் அதீத பாதுகாக்கப்பட வேண்டிய அந்த எந்திரங்களை ஸ்ரீவாஸ்தவா தனது வீட்டிற்க்கு எடுத்து சென்றிருக்கிறார்.
இந்த வாக்குபதிவு எந்திரங்களுக்கு முன்பில் இருந்து அபினவ் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றமும் செய்திருக்கிறார்.

0 comments for "வாக்குபதிவு எந்திரத்தை வீட்டிற்க்கு எடுத்து சென்ற தேர்தல் அதிகாரி!"