கிரீன்ஸ் ஸ்பைசி பிரியாணி


என்னென்ன தேவை?

நறுக்கிய ஏதேனும் இரு வகை கீரை - 1 கப்,
பிரியாணி அரிசி - 1 1/2 கப்,
உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா - சிறிதளவு, 
புதினா, மல்லி விழுது - தலா 1 டீஸ்பூன்.

பொடிக்க...

பட்டை - 1 துண்டு,
லவங்கம் - 2,
ஏலக்காய் - 2,
மராட்டி மொக்கு - 1,
அன்னாசிப் பூ - 1,
பச்சை மிளகாய் - 4 அல்லது 8 (தேவைப்படும் காரத்துக்கு ஏற்ப),
பூண்டு - 3 பல்,
இஞ்சி - 1 துண்டு.
நாட்டுத்தக்காளி - 3,
வெங்காயம் (நீளமாக நறுக்கியது - 1, எண்ணெய்,
நெய் (இரண்டும் சேர்த்து) - 100 கிராம்.  

எப்படிச் செய்வது?  

அரிசியைக் கழுவி, ஒன்றுக்கு இரண்டு வீதம் தண்ரில் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் கலவை சேர்த்து பொடித்த மசாலா சேர்க்கவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி புதினா, மல்லி விழுது சேர்க்கவும். வதங்கியபின் நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கி நீருடன் கூடிய ஊறிய அரிசியை சேர்த்து மூடி குக்கர் வெயிட் வைத்து 2 விசிலில் வைத்து இறக்கவும். கிரீன்ஸ் ஸ்பைசி பிரியாணி தயார்.Wash the rice, soak for one to two percent tanr.

Posted by tamilnadu on 10:01 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "கிரீன்ஸ் ஸ்பைசி பிரியாணி"

Leave a reply