பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப் பட்டு வரும் குடிநீரை அப்படியே பருகலாமா?:மருத்துவர் பதில்!



பிளாஸ்டிக் கேன்களில் விற்கப்படும் சுத்திகரிக்கப் (?) பட்ட குடிநீரை அப்படியே பருகலாமா என்கிற கேள்விக்கு சித்த வைத்திய நிபுணர் சிவராம கிருஷ்ணன் பதில் தருகிறார்.
"பிளாஸ்டிக் கேன்களில் தற்போது விற்கப்படும் குடிநீர் சுத்திகரிக்கப் பட்டதுதானா என்பதே சந்தேகத்துக்கு இடமான நிலையில், அந்த பிளாஸ்டிக் கேன் தண்ணீரை அப்படியே பருகுவது என்பது மிகவும் அபாயம். காரணம் பிளாஸ்டிக் கேன்களை வடிவமைக்கப் பயன்படுத்தப் படும் ரசாயனம் கொஞ்ச வெப்ப நிலையிலும் கரையும் தன்மை கொண்டது.

எனவே கேன்களில் வரும் குடிநீரை அப்படியே கவிழ்த்து வைத்து பயன் படுத்தாமல் வெண்கலம், செப்பு, எவர் சில்வர் பாத்திரங்களுக்கு தண்ணீரை மாற்றி விடுங்கள். அதோடு இதே வகை பாத்திரத்தில் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் வயிற்று வலி தீரும்.

எப்போதும் சளி பிரச்சனை இருப்பவர்கள் துளசி சேர்த்து கொதிக்க வைத்து அன்றாடம் குடிக்க பழகும்போது சளித் தொல்லைகள் தீரும். உடலில் பித்தம் அதிகமாக இருக்கிறது என்று கருதுபவர்கள் குடிநீரில் வில்வ இலைகளைப் போட்டு காய்ச்சி அன்றாடம் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஆக மொத்தம் எந்தவித குடிநீராக இருந்தாலும் வெறும் குடிநீராக அருந்துவதை விட மேற்கண்ட விஷயங்களை சேர்த்து குடிநீரை பருகுவது சிறந்தது. அதோடு இதெல்லாம் பிடிக்காதவர்கள் வெறுமனே காய்ச்சி ஆறவைத்த குடிநீரை பருகலாம்.ஆனால், பிளாஸ்டிக் கேன் தண்ணீரை அப்படியே அதில் வைத்தபடி பருகுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்." என்று கூறுகிறார் சித்த வைத்திய நிபுணர் சிவராம கிருஷ்ணன்.

Posted by tamilnadu on 5:58 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப் பட்டு வரும் குடிநீரை அப்படியே பருகலாமா?:மருத்துவர் பதில்!"

Leave a reply