காணாமற்போன மலேசிய விமனத்தின் உதிரிப் பாகங்கள் இருக்கும் இடம் தெரியும்! : இந்திய விஞ்ஞானி


மலேசிய விமானம் MH370 காணாமல் போய் 68 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
 இந்து சமுத்திரத்தில் தற்போது தேடப்பட்டு வரும் கடற்பகுதியிலிருந்து சுமார் 1400 கி.மீ வடக்கில் விமானத்தின் உதிரிப் பாகங்கள் இருக்கலாம் என  இந்தியாவின் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெயாபிரபு தெரிவித்துள்ளார்.

சீனாவின் கட்டற்படைக் கப்பல் ஒன்று தொடர்ந்து இவ்விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் சிறிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று தேடுதலில் ஈடுபட்ட போது சேதமானதால் ஆஸ்திரேலிய கடற்படைத் துறைமுகத்திற்கு திருத்தப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதோடு ஆஸ்திரேலிய - சீன மீட்பு படைகள் தேடுதலை தொடர்ந்து முன்னெடுக்க பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையிலேயே இந்தியாவைச் சேர்ந்த அறிவியலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 8ம் திகதி காணாமல் போன குறித்த மலேசிய விமானத்தில் 239 பயணிகள் சென்றனர். அவர்களில் ஐவர் இந்தியர்கள் ஆவார்கள்.

Posted by tamilnadu on 5:23 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "காணாமற்போன மலேசிய விமனத்தின் உதிரிப் பாகங்கள் இருக்கும் இடம் தெரியும்! : இந்திய விஞ்ஞானி"

Leave a reply