விடுதலை புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம் 2000 ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் தான் தீட்டப்பட்டது.
விடுதலை புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம் 2000 ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் தான் தீட்டப்பட்டது .
அப்போது வைகோ வும் ராமதாஸும் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தனர் ..
Kalaiyarasan Tha
Kalaiyarasan Tha
புலிகள் அழிவதற்கு காரணமான நாடுகளில் இந்தியா முக்கியமானது. உண்மை தான். அதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் பதவியில் இருந்த, காங்கிரஸ் கட்சியும், திமுக வும் மட்டுமே அதற்கு பொறுப்பு என்று, உண்மையை திரித்து திசை திருப்புகின்றனர். புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம், 2000 ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது. அந்தக் காலத்தில், பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தீவிர புலி ஆதரவுக் கட்சிகளான, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் அந்த அரசாங்கத்தில் இருந்தன. இலங்கையில் நடக்கும் இனப்போருக்கு தீர்வு காணும் விடயத்தில், தான் இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
2000 ம் ஆண்டளவில், விடுதலைப் புலிகளின் பலம் உச்சத்தில் இருந்த காலத்தில், யாழ் குடாநாடு முற்றுகையிடப் பட்டிருந்தது. போரில் தோல்வியடைந்து கொண்டிருந்த சிறிலங்கா அரசு, இந்தியாவிடம் அவசர உதவி கோரியது. யாழ் குடாநாடும், அங்கிருந்த நாற்பதாயிரம் படையினரும் புலிகளின் கையில் வீழ்ந்திருந்தால், இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். வட மாகாணம் முழுவதும், புலிகள் உரிமை கோரிய தமிழீழப் பிரதேசமாக இன்றைக்கும் நிலைத்து நின்றிருக்கும். ஆனால், இந்திய மத்திய அரசு அதனை அனுமதிக்க தயாராக இருக்கவில்லை. கேரளாவில், குறிப்பாக திருவனந்தபுரத்தை நோக்கி இந்தியப் படைகள் நகர்த்தப் பட்டன. யாழ் குடா நாடு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தால், படையெடுப்பதற்கு தயாரான நிலையில் இந்திய இராணும் அங்கே நிறுத்தப் பட்டிருந்தது.
புலிகளின் ஆதரவாளராக கருதப்பட்ட, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் உத்தரவின் பேரில் தான், இராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இதிலிருந்து, தமிழீழம் என்ற தனிநாட்டின் சாத்தியம் குறித்து, ஓர் உண்மை தெளிவாகின்றது. ஒருவேளை, புலிகள் தமது ஆயுத பலத்தினால், முழு தமிழீழ பிரதேசத்தையும் விடுதலை செய்திருந்தாலும், இந்தியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். சர்வதேச சமூகமும் அந்த படையெடுப்பை ஆதரித்திருக்கும். சில நேரம், அது ஐ.நா. தலைமையின் கீழும் நடந்திருக்கும்.
அதே நேரம், டெல்லியில் அவசரமான கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது. அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வைகோ, ராமதாஸ் ஆகியோர் தீவிர புலி ஆதரவாளர்கள் என்பதும், அவர்களது கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தனர் என்பதும் இங்கே நினைவுகூரத் தக்கது. அந்தக் கூட்டத்தில், இலங்கை நிலவரம் தொடர்பாக இந்திய பற்றி கலந்துரையாடப் பட்டது. பல சமரசங்களுக்குப் பின்னர், அதாவது வைகோவினதும் ஒப்புதலோடு தான், இராணுவ உதவி தவிர்ந்த, அனைத்து வகை உதவிகளையும் இலங்கை அரசுக்கு செய்வதென்ற முடிவு எடுக்கப் பட்டது.
ஒரு வேளை, தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில், இராணுவ உதவி தவிர்க்கப் பட்டிருக்கலாம். அந்தப் பொறுப்பை, இந்தியாவின் எதிரி நாடுகளான, பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஒப்படைப்பதற்கு, அரை மனதுடன் சம்மதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஈழ ஆதரவுப் பேச்சுக்காக கைதான வைகோ, வேலூர் சிறையில் சிறை வைக்கப் பட்டிருந்தார். அப்போது, "புலிகளை அழிக்கும் நோக்குடன் இராணுவத்தை அனுப்பத் துடித்த" பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிறையிலிருந்த வைகோவை சந்தித்துப் பேசினார்.
http://articles.economictimes.indiatimes.com/2002-07-31/news/27364861_1_mdmk-leader-vaiko-pota
http://articles.economictimes.indiatimes.com/2002-07-31/news/27364861_1_mdmk-leader-vaiko-pota
இதுவரை குறிப்பிடப் பட்ட எதுவும் இரகசியமாக நடக்கவில்லை. வெளிப்படையாக தன்னை அரச கைக் கூலிகளாக காட்டிக் கொள்ளும், வைகோ போன்றவர்களை, தமிழ் உணர்வாளர்கள் நம்ப முடியுமா?
Source link . http://kalaiy.blogspot.nl/2012/09/blog-post_17.html
0 comments for "விடுதலை புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம் 2000 ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் தான் தீட்டப்பட்டது."