குஜராத் அக்‌ஷர்தாம் ஆலய தாக்குதல்;

11 ஆண்டுகள் பொய் குற்றம் சாட்டி அடைக்கப்பட்ட இசுலாமியர்களுக்கு நீதி வேண்டி, மோடிக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்! மோடி பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நிலையில் சனிக்கிழமையன்று மோடிக்கு எதிரான மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. 2002 செப்டம்பர் மாதம் 24ம் தேதி அக்‌ஷர்தம் ஆலயத்தில் வெடிகுண்டு வெடித்தது.இதில் 30 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.இவ்வழக்கில் அல்தாப் மாலிக், அபுல்மியா காதிரி,அதம் அஜ்மீரி,முஹம்மத் ஹனீப் சேக், அப்துல் கைய்யூம், சாந்த் கான் என்கிற ஆறு இசுலாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள் மோடி முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சராக பதவி வகித்த போது தீவிரவாதிகளாக முத்திரை குத்தி 11 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட 6 இசுலாமியர்களையும் கடந்த வாரம் மே 16ம் தேதி உச்சநீதிமன்றம் நிரபராதிகள் என விடுதலை செய்திருந்தது. அக்‌ஷர்தாம் ஆலய தாக்குதல் வழக்கில் அப்பாவிகளை சிக்க வைத்த நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும என்ற கோரிக்கையுடன் டெல்லி குஜராத் பவன் முன்னில் ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் தீர்மாணித்தனர். ஆனால் டெல்லி மாநகர காவல்துறை குஜராத் பவன் முன்னில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மாணவர்களுக்கு தடை விதித்தது. குஜராத் பவனை நோக்கி மாணவர்கள் சென்ற பேரூந்தை ஷப்தர்ஜங் மதரசாவிற்க்கு அருகில் வைத்து தடுத்த காவல்துறையினர், மாணவர்களை வலுக்கட்டாயமாக ஜந்தர்மந்தர் பகுதிக்கு அணுப்பி வைத்தது.அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஜந்தர் மந்தரில் மோடிக்கு எதிரான முழங்கங்களுடன் பாதிக்கப்பட்ட அப்பாவி இசுலாமியர்களுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பொடா போன்ற சட்டங்களை ரத்து செய்யப்படவேண்டும எனறும் குற்றத்தில் ஈடுப்பட்ட காவல் துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷங்களாக எழுப்பினர். ஜெ.என்.யு மாணவர் அணியினரின் தலைமையில் டி.எஸ்.யூ, ஐஸா,எஸ்.எஃப்,ஐ, எ.ஐ.எஸ்.எஃப், எஸ்.ஐ.ஒ, டி.எஸ்.எஃப், யூ.டி.எஸ்.எஃப், ஜெ.எஸ்.எஸ்.எஃப் அன் டச்சபில்ஸ் இந்தியா தொடங்கிய அமைப்புகளின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாதிக்கப்பட்ட இசுலாமியர்களுக்கு நீதி வேண்டியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Posted by tamilnadu on 8:27 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "குஜராத் அக்‌ஷர்தாம் ஆலய தாக்குதல்;"

Leave a reply