மதுரை வெடிகுண்டு வழக்கில் 3 பேர் கைது: நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது
மதுரை உத்தங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலூரில் பதுங்கியிருந்த தங்கராஜ் மற்றும் கவியரசன் என்ற இருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தபோது, 2 நாட்டு வெடிகுண்டு, 2 பைப் வெடிகுண்டு, 6 ஜெலட்டின் குச்சி, ஒரு கத்தி, வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் மற்றும் 7 மீ வயர், லேப்டப் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments for "மதுரை வெடிகுண்டு வழக்கில் 3 பேர் கைது: நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது"