Jan 14: டெல்லி மாணவி கற்பழிக்கபட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பான விவாதங்களும், கடும் கண்டனங்களும் எழுப்பப்பட்டன. அது குறித்து RSS இயக்க தலைவர் மோகன் பாகவத் திருவாய் மலர்ந்துள்ளார்.அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத்தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை, இந்தியாவின் கிராமப் புறங்களிலோ, காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங்களில் மட்டுமே நடப்பதாகவும் பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.பேஷ்.... பேஷ் ... நன்னா இருக்கு! இப்படிபட்ட கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கொட்டான்களால் மட்டுமே சொல்ல முடியும். கற்பழிப்புகள் எல்லாம் இந்தியாவில்தான் நடக்குமாம் பரதத்தில் நடக்காதாம். அது என்ன பாரதம்! அது எங்கே இருக்கிறது? என்று கேட்க்காதீர்கள். இவர் இப்பொழுது வசிப்பது இந்தியாவிலா அல்லது இவர் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கும் கனவு கோட்டை பரதத்திலா.வர்ணாசிரம அடிப்படையில் பெண்களை இழிவுபடுத்துவதில் RSSக்கு இணையாக வேறு யாரையும் இந்தியாவில் சொல்ல முடியாது. கிராமங்களில் கற்பழிப்பே நடக்காதாம் நகரங்களில்தான் நடக்குமாம். இவர் நிகழ்காலத்தில் வாழ்கிறாரா? இல்லை இறந்த காலத்தில் வாழ்கிறாரா?ஹரியானாவில் தலித் கிராமப்பெண்கள் உயர்ஜாதிகாரர்களால் கற்பழிப்பு, சத்திஸ்கரில் பழங்குடி பெண்கள் கற்பழிப்பு, அசாமில் ஆயுதப்படை நடத்திய கற்பழிப்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கு கிராமங்களில் இந்திய ராணுவம் நடத்தும் கற்பழிப்பு இதுவெல்லாம் மோகன் பாகத்துக்கு தெரியாதா என்ன?
பழங்கால பாரத கலாசாரத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று சொல்லி வயிற்றில் புளியை வேறு கரைக்கிறார். பழங்கால பாரத கலாச்சாரம் என்றதும் உடன்கட்டை ஏறுவது, தேவதாசி முறை, பெண்கள் மேலாடை அணியக்கூடாது, தனி குவளை முறை, ஆகியவையே நினைவுக்கு வருகின்றது.
7:46 AM /
0
comments
/
Read more
Oct 30/2013: வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். விடுத்துள்ள அறிக்கை அமைதியை விரும்பும் இந்திய மக்களுக்கு எதிரான சவால் ஆகும்.
1927-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான கலவரங்களின் மூலம் தன்னை வளர்ந்து வந்த RSS பயங்கரவாத இயக்கம் இந்த அறிக்கையின் மூலம் தனது உண்மையான முகத்தை உலகுக்கு காட்டியுள்ளது.
தேசத் தந்தை காந்தியடிகளையும், பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களையும் கொலை செய்து அவர்களின் இரத்தத்தில் ஹோலி கொண்டாடியவர்கள், இன்று வகுப்புவாத கலவரத் தடுப்புச் சட்ட மசோதா அமுலாக்கப்படுவதை தடுப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
சமூகத்தின் அமைதியை கெடுக்கும் இத்தகைய அற்பர்களின் ஜம்பங்கள் எதுவும் தங்களது துணிச்சலை பாதிக்காது என்பதை பொறுப்புள்ள இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் நிரூபித்து காட்ட வேண்டும். நாம் எல்லோரும் சகோதர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
ஹிந்து, முஸ்லிம், புத்தன் என்று இந்திய மக்களை பிரித்து அதன் மூலம் பிரிவினைவாதத்தை சக்திப்படுத்தும் சங்க்பரிவாரத்தின் சூழ்ச்சிகளை காணாதது போல் நடித்தால் இந்தியாவில் ஒரு மாபெரும் உள்நாட்டு யுத்தத்தை நாம் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஒரு நாட்டிலே வாழும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மை சமூகத்தால் நசுக்கப்படும் பொழுது அதுவே ஒரு உள்நாட்டு யுத்தமாக மாறுகிறது என்பதை பொறுப்புள்ள யாரும் மறுத்து விட முடியாது.
கொடிய கொலைகளையும், இரத்தத்தை ஓடச் செய்வதையும் தங்களது வரலாறாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மொத்த ஹிந்து சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களை காட்டிக் கொள்வது முரண்பாடானது. ஆர்.எஸ்.எஸ். தேசிய நிர்வாக குழுவில் முஸ்லிம் சமுதாயம் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களும் அறிக்கைகளும் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் மக்கள் விரோத தீவிரவாதச் செயல்களை தோலுரித்துக் காட்டும்.
7:44 AM /
0
comments
/
Read more

அம்பாலா: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தற்போதைய தலைவரான மோகன் பகவத் உத்தரவைத் தொடர்ந்தே நாட்டில் பல குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தினோம் என்று சிறையில் இருக்கும் ஹிந்து தீவிரவாதி சுவாமி அசீமானந்த் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் தாக்குதல், மலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் முதன்மை குற்றவாளியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதிவாசிகள் அமைப்பின் தலைவர் சுவாமி அசீமானந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் தேசிய செயற்குழு உறுப்பினரான பிரக்யா சிங் தாகுர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி உளிட்ட 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில் சுவாமி அசீமானந்தை caravanmagazine.in என்ற இணைய தள ஊடக நிர்வாகத்தினர் 20011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை பல்வேறு சூழல்களில் அம்பாலா சிறையில் சந்தித்து பேசினர்.
அப்போது அசீமானந்தா தெரிவித்த தகவல்களை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் அசீமானந்த் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் சுருக்கம்:
மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நாதுராம் கேட்சோ, நாராயண் அப்தே ஆகியோர் 1949ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்ட சிறைதான் இந்த அம்பாலா சிறை. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டு 18 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே. அவர் அடைக்கப்பட்டிருந்த அதே செல்லில்தான் இப்போது நான் இருக்கிறேன்.
அது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஹிந்துக்களின் நன்மை கருதியே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினோம். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். என்னை யாரும் துன்புறுத்தியது இல்லை.. அனைத்து விசாரணை அதிகாரிகளிடமும் நான் ஒப்புதல் வாக்குமூலம்தான் கொடுத்திருக்கிறேன். 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதாவது குஜராத்தின் சூரத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு முடிவடைந்த பின்னர் அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலராக இருந்த தற்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் இந்தரேஷ் குமார் ஆகியோர் குஜராத்தின் டாங்க்ஸ் பகுதியில் என்னை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது சுனில் ஜோஷியும் உடனிருந்தார். இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது மோகன் பகவத் என்னிடம், நீங்கள் சுனில் ஜோஷியுடன் இணைந்து இதை செய்யுங்கள்.. நாங்கள் நேரடியாக தலையிட முடியாது.. இப்படி குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது ஒன்றும் குற்றமும் அல்ல.. இது நமது தத்துவ சிந்தனையுடன் தொடர்புடையது. ஹிந்துக்களுக்கு முகவும் முக்கியமானது. தயவு செய்து இதை நீங்கள் செய்யுங்கள்.. உங்களுக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார். இவ்வாறு சுவாமி அசீமானந்த் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தே குண்டுவெடிப்புகளுக்கு உத்தரவிட்டார் என சுவாமி அசீமானந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8:30 PM /
0
comments
/
Read more