மோடிக்கு எதிராக விழுந்த ஓட்டுகள் 70 % – ஆனால் மோடி பெரும்பான்மையில் பெரு வெற்றி. இது எப்படி?
மோடிக்கு எதிராக விழுந்த ஓட்டுகள் 70 %
31 % ஓட்டு வாங்கிய மோடி பிரதமர். இதுதான் இந்திய சட்டம்.
மோடி பெரும்பான்மையில் வெற்றி பெற்று விட்டார் என மீடியாக்கள் வாங்கிய காசிற்கு ஒரு புரம் கூவிக் கொண்டிருக்க ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை என்பது கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு எண்ணிக்கை விகிதத்தை பார்க்கையில் தெளிவாக தெரிகின்றது.
இந்தியா முழுவதும் உள்ள நாட்டு மக்கள் அளித்த ஓட்டில் வெறும் 31 சதவிகத ஓட்டுக்கல் தான் மோடியின் பி.ஜே.பிக்கு கிடைத்துள்ளது. கிட்ட தட்ட 70 சதவித மக்கள் மோடியின் ஆட்சியை விரும்பவில்லை. மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
மோடி அலை உண்மையாக இருந்தால் குறைந்த பட்சம் 60 சதவிகத ஓட்டுக்களையாவது மோடியின் பி.ஜே.பி பெற்றிருக்க வேண்டும். ஆனால் மோடியின் வேலை அந்த அளவிற்கு எடுபடவில்லை.
பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஆட்சியை இந்திய மக்கள் தற்போது சந்திக்க இருக்கின்றார்கள். அப்படியெனில் மோடிக்கு எதிராக ஓட்டு போட்ட 70 சதவிகித மக்களின் கருத்திற்கு என்ன மதிப்பு ? இது தான் இந்திய நாட்டின் சட்டம்.
காங்கிரஸ் படு தோல்வி அடைந்து விட்டது என மீடியாக்கள் கூறினாலும் காங்கிரசை விட வெறும் 11 சதவிகித ஓட்டுக்களை தான் மோடியின் பி.ஜே.பி கட்சி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒட்டு மொத்த ஓட்டுக்களில் 19 சதவிகித ஓட்டுக்களை பெற்றுள்ளது. 19 க்கும் 31க் கும் பெரிய வித்தியாசம் இல்லை!
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி க்கு கிடைத்த வாக்குகளை விடம் வெறும் 13 சதவிகிதம் வாக்குகள் தான் இந்த முறை மோடியின் பிஜேபி கட்சிக்கு கிடைத்துள்ளது.
மீடியாக்கள் என்னமோ பிஜேபியின் மோடி, மலையை மல்லாக்க கவுத்திட்டாரு ன்னு ஓவரா பில்டப் கொடுக்குது. காசு கொடுத்தால் எலியையும் எருமையாக்கிடுவார்கள் இந்த மீடியாக்கள்….
0 comments for "மோடிக்கு எதிராக விழுந்த ஓட்டுகள் 70 % – ஆனால் மோடி பெரும்பான்மையில் பெரு வெற்றி. இது எப்படி?"