வன்முறையின் மறுபெயர் பா.ஜ.க.

வன்முறையின் மறு பெயர் பா.ஜ.க. (ஆர் எஸ் எஸ்)

தில்லியிலும், தமிழ் நாட்டிலும், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறித்து, இந்து மதக் குழுக்களின் ஊடாக மீண்டும் பா.ஜ.க., தன் சுய உருவத்தைக் காட்டி இருக்கிறது.

தில்லியின் எல்லைக்கு அருகில் உத்திரப்பிரதேசத்தின் காசியாபாத் கௌசாம்பியில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அருகில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தை 08.01.2014 அன்று 40 பேர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அடித்து நொறுக்கி யிருக்கிறது.



இந்தக் கைங்கரியத்தைச் செய்தது ‘இந்து ரக்ஷா தள்’ என்ற இந்து மத வெறிக்குழு. என்ன காரணம்?

ஆம் ஆத்மி கட்சியின் முன்னணிப் பொறுப்பாளரான பிரசாந்த் பூஷன், காஷ்மீரில் இருந்து இராணுவம் திரும்பப் பெறுவது குறித்து அம்மாநில மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று அண்மையில் கூறிய கருத்துதான், ஆம் ஆத்மி அலுவலகம் அடித்து நொறுக்கப் பட்டதற்குக் காரணமாம்.

இங்கே காஷ்மீர் சிக்கலுக் குள் நாம் நுழையவில்லை. நமது கேள்வி இந்நாட்டில் பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், இருக்கிறதா, இல்லையா என்பது குறித்துதான்.

கருத்துச் சுதந்திரம் ஒருவழிப் பாதையன்று, அது இருவழிப் பாதை. நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துகள் வரும், போகும் அது விவாதங் களாக மாறுவதும் கூட அடுத்த கட்டத் திற்கான நகர்வாக இருக்க முடியும்.

மாறாக என் கருத்துக்கு எதிர்க் கருத்தே சொல்லக்கூடாது என்று அடிதடி மிரட்டல் செய்வதெல்லாம், நாகரிகச் செயலாக இருக்க முடியாது. இது ஒரு வகையான சண்டித்தனம். அதைத்தான் தில்லியில் பா.ஜ.க., செய்திருக்கிறது.

இந்நிகழ்ச்சி குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் பொத்தாம் பொதுவாக, இத்தாக்குதலுக்கும் பா.ஜ.க.,வுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்கிறார்.

ஆனால் பாதிப்புக்கு ஆளான ஆம் ஆத்மி பிரசாந்த் பூஷன் “தாக்குதலை நடத்தியவர்கள் இந்து ரக்ஷா தளத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள். இதில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில், ஒருவரான விஷ்ணுகுப்தா இதற்கு முன்னும் என்னைத் தாக்கியுள்ளார். தேஜிந்தர்கன்னாவும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்” என்று தெளிவாக பா.ஜ.க.,வை அடையாளம் காட்டுகிறார்.




வன்முறை என்பது பா.ஜ.க.,வுக்கு ஒன்றும் புதியதன்று.

அயோத்தியில் இராமர் கோயில் இடிப்பு, கோத்ரா எரிப்புச் சம்பவம், முசாபர்பாத் கலவரம் இவை எல்லாம் பா.ஜ.க.,வின் வன்முறைக் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டு.

- எழில்.இளங்கோவன்

Posted by tamilnadu on 10:34 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "வன்முறையின் மறுபெயர் பா.ஜ.க. "

Leave a reply