அறிவு திறனும் உழைப்புமே, மோடியை பிரதமராக உயர்த்தியுள்ளது – கருணாநிதி
அறிவு திறனும் உழைப்புமே, மோடியை பிரதமராக உயர்த்தியுள்ளது – கருணாநிதி
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி வருகிற 26–ந் தேதி பதவியேற்கிறார். பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:–
பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் நீங்கள் ஒரு மனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழத்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத்தில் வியக்கதக்க பணிகளை மேற்கொண்ட நீங்கள் இன்று நாட்டின் உயர்ந்த நிலையை அடைந்து இருக்கிறீர்கள். இதற்கு உங்களது அறிவு திறன், உழைப்பு, கடுமையான பணி தான் காரணமாகும்.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் நீங்கள் நேற்று ஆற்றிய உரை ஏற்றுக் கொள்ள தக்க வகையில் இருந்தது. அனைத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.
பிரதமராக பொறுப்பேற்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments for "அறிவு திறனும் உழைப்புமே, மோடியை பிரதமராக உயர்த்தியுள்ளது – கருணாநிதி"