பிரதமராக பொறுப்பேற்கும் 'நரேந்திர மோடிஜி'க்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை: நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'நரேந்திர மோடி ஜி' என விளித்து திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கும் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
குஜராத்தில் தொடங்கி நாட்டின் உயரிய பதவிக்கு கடுமையான நேர்மையான உழைப்பின் மூலம் உயர்ந்துள்ளீர்கள்.
வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரையாற்றிய நீங்கள், உங்கள் அரசை பெண்கள், இளைஞர்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறியிருந்தீர்கள்.
அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் நீங்கள் நிறைவு செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம். உங்கள் ஆட்சியில் இளைஞர்கள், பெண்கள், நலன் பாதுகாக்கப்படும் என பெரிதும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்
0 comments for "பிரதமராக பொறுப்பேற்கும் 'நரேந்திர மோடிஜி'க்கு கருணாநிதி வாழ்த்து"