தேர்தல் ஆணையத்தை சோதிக்கும் தேர்தல்- நீதி கிடைக்குமா?


தேர்தல் ஆணையத்தை சோதிக்கும் தேர்தல்- நீதி கிடைக்குமா?

”கணக்கில் இல்லை எனில்” மோடி வெட்பாளர்களின் வெற்றி செல்லாது – தேர்தல் ஆணையம்!

மோசடி மன்னன் மோடி ஆட்சியை பிடிக்க செய்த சதிகள் ஒவ்வொன்றாக தற்போது அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வரிசசையில், பணம் வாங்கிக் கொண்டு மோடிக்கு ஆதரவாக PAID NEWS வெளியிட்டதாக ஊடகங்கள் மீது சொல்லப்பட்ட 3,053 புகார்களில், 694 புகார்களுக்கு ஆதாரம் கிடைத்திருப்பதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் கமிஷனுக்கு வந்த எல்லா புகார்கள் குறித்தும் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி பெராதவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக, தேர்தல் கமிஷனின் ‘ஜெனரல் டைரக்டர், அக் ஷை, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ”மோடிக்கு ஆதரவாக பணம் பெற்று, மீடியாக்கள் பரப்புரை செய்தது குறித்து வந்த புகார்களில், எல்லோருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தாலும், 694 புகார்களில் உண்மை இருப்பதை தேர்தல் கமிஷன் கண்டு பிடித்துள்ளது,” என்றார்.

மோடிக்கு ஆதரவாக செய்திகளை போட பணம் வாங்கிய மீடியாக்கள், எதிர்கட்சிகளுக்கு எதிராக செய்திகளை வெளியிடவும் கூட, பணம் பெற்றுள்ளதை தேர்தல் கமிஷன் கண்டுபிடித்துள்ளதாக தொடர்ந்து அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ‘கவரேஜ்’ என்ற பெயரில், செய்திகளைப் போல வந்த பல ஆய்வுகள், கட்டுரைகள், கருத்து கணிப்புக்களை வெளியிட்ட மீடியாக்கள், அதற்காக விளம்பர ‘TARIFF’ அடிப்படையில், நிர்ணயித்து பணம் பெற்றுள்ளதும், தற்போது அம்பலமாகியுள்ளது, என்கிறார், தேர்தல் கமிஷன் ஜெனரல் டைரக்டர் அக் ஷை.

வெற்றி பெற்ற எம்.பிக்கள் தாங்கள் மீடியாக்களுக்கு அளித்த பண விபரங்களை வேட்பாளர் செலவு பட்டியலில் சேர்க்கவில்லை எனில் அவர்கள் அளித்த தகவல்கள் தவறானது என அறிவிக்கப்பட்டு அவர்களின் வெற்றி செல்லாது என தேர்தல் ஆனையம் அறிவிக்கும் எனவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பி.ஜே.பி வெற்றி பெற்ற பல்வேறு இடங்களில் மறு தேர்தல் வர வாய்ப்புள்ளது என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மஹாராஷ்ட்ர முதல்வர் அசோக் சவான் ”Paid News” குறித்த வழக்குகளை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என சுப்ரிம் கோர்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மே 5 ஆம் தேதி சுப்ரிம் கோர்ட் அதை தள்ளுபடி செய்து ”தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து ”Paid News” குறித்த விசாரனையை தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

Source : www.appadiaa.com

Posted by tamilnadu on 9:16 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

2 comments for "தேர்தல் ஆணையத்தை சோதிக்கும் தேர்தல்- நீதி கிடைக்குமா?"

  1. உச்ச நீதிமன்றத்தில் ஒரு காவி உட்கார்ந்துகொண்டு அவாளுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லுவார். இந்தியாவில் நீதி ,நேர்மை ,நியாயம் எல்லாம் செத்துவிட்டது பிரதர்.

  2. இப்போது அவர்களும் ஆட்சி அவர்களுக்கு ஏற்றார் போல சட்டத்தை எளிதாக எமற்றுவருகள் இல்லையெனில் பிரச்சனை முற்றி போனால் எதாவது பெரும் அசம்பாவிதம் ஏற்படுத்தி ப்ரட்சனைஏய் திசை திருபுவர்கள்

Leave a reply