மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உமாநாத் காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உமாநாத் காலமானார்.
திருச்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உமாநாத் திருச்சியில் இன்று காலமானார். உமாநாத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை திருச்சியில் உள்ள மருத்துவமனையில் உமாநாத் காமானார். உமாநாத் 2 முறை நாடாளுமன்றத்துக்கும், 2 முறை சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும், 3,4-வது மக்களவைக்கு புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977 மற்றும் 1980ல் நாகை தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பல ஆண்டுகளாக சிஐடியூ தொழிற்சங்கத் துணைத் தலைவராக இருந்தவர் உமாநாத் என்பது குறிப்பிடத்தக்கது. 92 வயதான உமாநாத் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 1922ம் ஆண்டு பிறந்தவர்.

0 comments for "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உமாநாத் காலமானார்"