ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுத்தால் தமிழக அரசு எதிர்க்குமா ?
ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுத்தால் தமிழக அரசு எதிர்க்குமா ?
எதிர்வரும் 26ம் திகதி, திங்கட்கிழமை இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பெரும்பாலும் கலந்து கொள்வார் என கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்கான அழைப்பு புதுடெல்லியிலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
அயல் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அயல்நாட்டுடன் எப்போதுமே சுமுக உறவை விரும்பும் இலங்கை, அந்த உறவையும் நட்பையும் பலப்படுத்துவதையே விரும்புகிறது.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுவதன் மூலம் இந்தியாவின் புதிய ஆட்சிப் பீடத்துடன் ஒரு நெருக்கமான உறவைத் தொடர்வதற்கும், இருதரப்பு ஊடாட்டத்தைப் பலப்படுத்துவதற்கு முடியும் என கொழும்பு கருதுகின்றது என இவ்விடயங்களுடன் சம்பந்தப்பட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்களன்று மாலையில் புதுடெல்லியின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகின்றது.
தற்சமயம் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி, அங்கிருந்து திரும்பிய பின்னர், புதிய இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் பங்குபற்றுவதற்காகப் புதுடெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுமாறு இலங்கை உட்பட அனைத்துத் தென்னாசிய நாடுகளின் தலைவர்களுக்கும் புதுடெல்லி அழைப்பு அனுப்பியிருப்பதாக அறியவந்திருக்கிறது.
இனப்படுகொலை செய்த ஒரு குற்றவாளியான ராஜபக்சே இந்திய பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுப்பது தமிழர்களை புண்படுத்தும் செயலாக அமைந்துவிடும் என்று தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்து உள்ளனர் . இதனால் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்தால் தமிழர்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் எனத் தெரிகிறது . ஒருவேளை தமிழர்களின் எதிர்ப்பை மீறி ராஜபக்சே டெல்லி வந்தால் , தமிழர்கள் எவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது , புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர். பாஜக சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வேட்பாளர்கள் கூட இதில் பங்கேற்கக் கூடாது . மேலும் தமிழக அரசும் , தமிழக மக்களின் குரலாக ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அறிக்கை வெளியிடவேண்டும். தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் . மக்களின் நலனுக்கு எதிராக நடக்க மாட்டேன் என்று மோடி கூறியுள்ள நிலையில் , தமிழர்களின் நலனுக்கு எதிராக மோடி ராஜபக்சேவை டெல்லியில் வரவேற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
0 comments for "ராஜபக்சே பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுத்தால் தமிழக அரசு எதிர்க்குமா ? "